நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகை லதா நடிகர் விக்னேஷ் நீதி வழங்கி இருக்கிறார்கள்.

சென்னை 24 மே 2024

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகை லதா நடிகர் விக்னேஷ் நீதி வழங்கி இருக்கிறார்கள்.

தமிழ் திரைப்பட உலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதி வழங்கி இருக்கிறார்கள். .

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் படப்பிடிப்பு இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிகர் நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

தனது சொந்த செலவில் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதையடுத்து நடிகை ஜெயசித்ரா 200க்கு மேற்பட்ட நடிகர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் வாழ்வாதாரம் இழந்து வாடும் நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய். ஒரு லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூபாய். 50 ஆயிரமும், நடிகை லதா 25 ஆயிரமும் நடிகர் விக்னேஷ் 10 ஆயிரமும் வழங்கியுள்ளனர்.

இவை அனைத்தும் நேரடியாக நடிகர் சங்க வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது.