நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘அசுரன்’ திரைப்படத்திற்கு – ரூ.100 கோடியைக் கடந்த வியாபாரம்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை மஞ்சு வாரியர் உள்பட பலர் நடிப்பில் கடந்த 4ம் தேதி வெளியான படம் ‘அசுரன்’. இந்தப் படம் 10 நாட்களில் மொத்த வசூலில் ரூ.50 கோடியைக் கடந்துள்ளது. மேலும், திரையரங்க வியாபாரம், இசை உரிமை, தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம், வெளிநாட்டு உரிமம் என ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடியைக் கடந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தயாரிப்பாளர் தாணு கூறுகையில், ‘கபாலி’, ‘துப்பாக்கி’, ‘தெறி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து என் தயாரிப்பில் 4-வதாக ரூ.100 கோடியைக் கடந்துள்ள படம் ‘அசுரன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.











