ஒரே சமயத்தில் 3 மொழி படங்களில் நடிக்கும் நடிகை திரிஷா

தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக கதாநாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் படத்திலும், மலையாளத்தில் மோகன்லால் அடுத்து நடிக்க உள்ள படத்திலும் நடிகை திரிஷா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் திரிஷா நடிக்க உள்ளார்.

error: Content is protected !!