தளபதி விஜயுடன் 14 வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் நடிகை திரிஷா!!
சென்னை 09 ஆகஸ்ட் 2022 தளபதி விஜயுடன் 14 வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் நடிகை திரிஷா!!
நடிகர் தளபதி விஜய் தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது தளபதி விஜய் அடுத்த திரைப்படமான ‘தளபதி 67’ என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தளபதியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தற்போது தளபதி நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படமான தளபதி 67 குறித்த செய்தி வெளிவந்துள்ளது.
மேலும் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘தளபதி 67’ திரைப்படத்தை இயக்க கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் தற்போது திரைப்படத்தின் சமீபத்திய செய்தி நடிகை த்ரிஷா ‘தளபதி 67’ திரைப்படத்தில் இணைவதாக செய்தி வந்துள்ளது.
நடிகை சமந்தா தான் முன்னணி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக முன்பே தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தில் விஜய்யின் மனைவியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை த்ரிஷா மற்றும் விஜய்யின் அதிர்ஷ்ட கூட்டணியாக கருதப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படத்தில் நடித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன் பின் 14 வருடங்களுக்கு பிறகு த்ரிஷா ஐந்தாவது முறையாக தளபதி விஜய்யுடன் ஜோடியாக நடிக்கிறார்.
இந்த செய்தி பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.