தலைவர் 168 28 வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணையும் நடிகை குஷ்பூ.

தர்பார் படத்தையடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இதற்கு தற்காலிகமாக தலைவர் 168 எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, இமான் இசையமைக்கிறார். முக்கிய வேடத்தில் சூரி & பிரகாஷ்ராஜ் நடிக்கின்றனர்.

கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதை படக்குழு அறிவித்துள்ளனர்.

இன்று காலையில் நடிகை மீனா இணைந்துள்ளதை அறிவித்தனர்.

தற்போது குஷ்பூ முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதை அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே மன்னன், அண்ணாமலை, பாண்டியன் உள்ளிட்ட படங்களில் குஷ்பூ ரஜினிகாந்துடன் நடித்துள்ளார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது 28 வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கிறார்.

error: Content is protected !!