காலையில் கல்யாணம் மாலையில் தலைவர் 168 பட வாய்ப்பு நடிகர் சதீஷ் செம ஹாப்பி.!

இன்று டிசம்பர் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு சிந்து என்ற பெண்ணை நடிகர் சதீஷ் திருமணம் செய்துக் கொண்டார்.

இதே நாளில் தற்போது மாலை நேரத்தில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 படத்தில் நடிகர் சதீஷ் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் புதுமாப்பிள்ளை சதீஷ்ம் அவரது மனைவியும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 168 படத்தை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

முதன்முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசைமைப்பாளர் இமான் இசையமைக்கிறார்.

இதில் ரஜினிகாந்துடன் நடிகைகள் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

error: Content is protected !!