இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் ‘பிஸ்கோத்’. இதில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார்.
இயக்குனர் ஆர்.கண்ணன்் இயக்கத்தில் ‘ஜெயம் கொண்டான்’ மற்றும் ‘கண்டேன் காதலை’ படங்களில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், அவரை கதாநாயகனாக வைத்து இயக்குவது இதுதான் முதல் படம். பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை.இப்படத்தில் சந்தானத்திற்கு மூன்று வேடங்கள் இருக்கிறது. அதில் ஒன்று ‘சகலகலா வல்லவன்’ படத்தில் கமல் போல வேடம் அணிந்து இருப்பார். அந்த வேடத்தில் அந்த கால பாணியில் ஒரு சண்டைக் காட்சியும் இருக்கிறது. அதேபோல், ஐதராபாத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உள்ளதுபோல் அரண்மனை தளம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது.
இசையமைப்பாளர் ரதன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருந்தவர். நாம் எதிர்பார்ப்பதை அப்படியே கொடுக்கும் திறமைசாலி. ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா இருவரும் நாயகிகளாக நடிக்க, ஆனந்த்ராஜ், சௌகார் ஜானகி, ‘மொட்ட’ ராஜேந்திரன், சிவசங்கர், ‘லொள்ளு சபா’ மனோகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
எழுத்து இயக்கம் – ஆர்.கண்ணன்
இசை – ரதன்
ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம்
படத்தொகுப்பு – ஆர்.கே.செல்வா
கலை – ராஜ்குமார்
சண்டை பயிற்சி – ஹரி
நடனம் – சதீஷ்
மக்கள் தொடர்பு – ஜான்சன்
தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர்
தயாரிப்பு – ஆர்.கண்ணன்.
Related posts:
நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் ‘பிஸ்கோத்’ தீபாவளிக்கு வெளியாகிறது!
இரண்டு ஜோடிகளுடன் சந்தானம். R.கண்ணன் இயக்கும் புதிய படம் !
பிஸ்கோத் ‘ திரைப்படத்தில் ராஜபார்ட் கெட்டப்பில் அசத்தும் நடிகர் சந்தானம் !
இயக்குநர் R. கண்ணன் இயக்கும் புதிய படம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். படப்பிடிப்பு ஆரம்பமானது.
பிஸ்கோத் திரை விமர்சனம் ரேட்டிங் – 2.5 /5
ஏ1 புரோடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜான்சன்.கே தயாரித்து இயக்க, யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்”!!
400-வது படத்தில் நடித்து வரும் ‘சௌக்கார்’ ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் – இயக்குநர் ஆர்.கண்ணன்.
சரியான படம் எடுக்கவில்லையென்றால் யாராக இருந்தாலும் தொலைந்து விடுவார்கள் – நடிகர் சந்தானம்.
கதை திரைக்கதை வசனத்தையும் அவரே எழுதி கதையின் நாயகனாக நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய படம் துவக்கம் !!
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்: கதையின் நாயகனாக சதீஷ், நாயகியாக பவித்ரா லட்சுமி அறிமுகம்்.

