திருட்டுத்தனமாக ஊரடங்கு உத்தரவு நேரத்தில் மதுபானம் விற்ற திரௌபதி துணை நடிகர் கைது..!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
ஊரடங்கை உத்தரவை மீறி காரில் வைத்து மதுபானம் விற்ற திரௌபதி திரைப்படத்தில் நடித்த துணை நடிகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த மதுபானங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன.
இதை பயன்படுத்தி யாராவது சட்டவிரோதமாக மதுபானம் விற்கிறார்களா? என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கே.கே.நகர், பிருந்தாவன் நகர் பகுதியில் திரெளபதி படத்தில் நடித்த துனை நடிகர் ரிஸ்வான் (வயது 30), என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்றப் போது எம்.ஜி.ஆர். நகர் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர், சினிமாவில் துணை நடிகராக நடித்து வருவது தெரிந்தது.
அவரிடமிருந்து 69 மதுபாட்டில்கள் மற்றும் ரூபாய்.2,500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரிஸ்வான் துணை நடிகர் என்பதால் திரைப்பட துறையை சேர்ந்தவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிந்தது.
அதே போல் விருகம்பாக்கம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது தசரதபுரம், மீன் மார்க்கெட் அருகில் காரில் வந்து மதுபானம் விற்பனை செய்து வந்த 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள், சூளைமேட்டை சேர்ந்த தேவராஜ்(40), சாலிகிராமத்தை சேர்ந்த பிரதீப்(31) திரைப்படத்துறையில் தயாரிப்பு உதவியாளர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 189 மது பாட்டில்கள், ரூ.20 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திரௌபதி உள்ளிட்ட சினிமா படங்களில் நடித்த துணை நடிகரான ரிஸ்வான், தேவராஜிடம் பிரதீப் இருந்து குவார்ட்டர் பாட்டில் ஒன்று ரூ.1000 கொடுத்து வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்து சினிமா துறையில் உள்ள தனது நண்பர்களுக்கு ரூ.1500க்கு விலை பேசி அதை அவர்களின் வீட்டிற்கு கொண்டு சென்று சப்ளை செய்து வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஓட்டுநர் தேவராஜ் யாரிடம் இருந்து மதுபானம் வாங்கினார் என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பின்னர் கைதான துணை நடிகர் உள்பட 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
அவர் என் நண்பர் தான்.. பெயர் Rizwan Rizu.. நடிகர்.. பலகுரல் மன்னன்.. Sun music முன்னாள் Video jockey.. இது கண்டிக்கத்தக்க ஒரு செயல்.. இதற்கான தண்டனையை அனுபவிக்க போறார்.. நான் எதிர்பாராத ஒரு செய்தி இது.. https://t.co/hzGHBtCPFS
— Mohan G Kshatriyan (@mohandreamer) April 19, 2020











