மீம்ஸ் கிரியேட்டர்களின் என்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் – வடிவேலுவை புகழ்ந்த நடிகர் விவேக்.
வைகைப்புயல் வடிவேலுவைப் போல் மீம்ஸ் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் திரைப்பட உலகில் எவரும் இல்லை என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு மற்றொரு தலைவலியாக மாறியுள்ளது.
இந்நிலையில் வெட்டுக்கிளிகளை வைத்து பலரும் மீம்ஸ் உருவாக்கி வருகின்றனர்.
அதில் நடிகர் விவேக் ரன் திரைப்படத்தில் நடித்த காட்சியை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் அவருக்கு கண்ணுக்கு தென்பட, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஒரு திரைப்படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்றீங்க. யாரை எல்லாம் ஓட்டுரீங்க. மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க” என்று பாராட்டியுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில் மீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவர் என்று வைகைப்புயல் வடிவேலுவைப் புகழ்ந்து ட்வீட் செய்திருப்பதைக் குறிப்பிட்டிருக்கும் நடிகர் விவேக், “உண்மை. வைகைப்புயல் வடிவேலுவைப் போல் மீம்ஸ் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை. வாழ்க அவர் நகைச்சுவைப் பணி” என்று கூறியுள்ளார்.
உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை! வாழ்க அவர் நகைச்சுவைப் பணி!! https://t.co/BaKsmsOzuH
— Vivekh actor (@Actor_Vivek) May 29, 2020











