சின்ன கலைவாணர்’ நடிகர் விவேக் இன்று காலமானார்.

சென்னை 17 ஏப்ரல் 2021சின்ன கலைவாணர்’ நடிகர் விவேக் இன்று காலமானார்.

சின்ன கலைவாணர்’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விவேக்.

இவர் சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசியை அரசு மருத்துவமனையில் போட்டுக் கொண்டார்.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த
கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் விவேக் மயங்கி விழுந்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள SIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் எக்மோ சிகிச்சை கொடுக்கப்பட்டது.

நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ குழுவினர் அவருக்கு 100% அடைப்பு உள்ளது.

‌அவர் கொரோனா ஊசி போட்டுக் கொண்டதற்கும் அவரது இந்த நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மருத்துவக்குழு தெரிவித்தது.

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக மருத்துவக்குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.

நடிகர் விவேக் இதயத்தின் இடப்புற ரத்தக் குழாயில் 100% அடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் விவேக் இன்னும் ஆபத்தான நிலையில்தான் இருக்கிறார் என்றும் 24 மணி நேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலை குறித்து சொல்ல முடியும் என்று கூறிவந்தனர்.

இந்த நிலையில் நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த செய்தி திரைத்துறை மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதளங்களில்  நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!