கோவில்பட்டி போலீஸ் லாக்அப்பில் தந்தை-மகன் படுக்கொலை அதிகார துஷ்பிரயோகம் என கமல்ஹாசன் கண்டனம்

கோவில்பட்டி போலீஸ் லாக்அப்பில் தந்தை-மகன் படுக்கொலை அதிகார துஷ்பிரயோகம் என கமல்ஹாசன் கண்டனம்

தூத்துக்குடி, சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

கடந்த 19ஆம் தேதி (கொரோனா ஊரடங்கு உத்தரவு சமயத்தில்) கடையை கூடுதல் நேரமாக திறந்து வைத்துள்ளதாக அங்கு சென்ற போலீஸ்காரர் அவரை திட்டியுள்ளனர்.

மாலை 7.30 மணிக்கு சாத்தான்குளம் 2 எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் அப்போது அங்கு வந்துள்ளனர்.

ஜெயராஜ்க்கும் அங்கு வந்த போலீசுக்கும் வாக்குவாதம் தொடர “ஸ்டேஷனுக்கு வா” என ஜீப்பில் அழைத்து சென்றுள்ளனர்.

இந்த விஷயம் ஜெயராஜ் மகன் பென்னிஸ்க்கு தெரிய வரவே அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தனது அப்பாவை தேடி சென்றுள்ளார்.

“எனது அப்பாவை ஏன் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்தீங்க” என 2 எஸ்ஐ-க்களிடமும் கேள்வி கேட்டுள்ளார்.

இதனையடுத்து முன்பே ஜெயராஜை போலீஸார் தாக்கியதாக தெரிகிறது.

இதனால் கடுப்பான பென்னிக் போலீசாரிடம் மீண்டும் கேள்வி கேட்க அவரையும் லத்தியால் அடித்துள்ளனர்.

இதனையடுத்து 21ஆம் தேதி தந்தை – மகன் இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டு கோவில்பட்டி ஜெயிலில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நெஞ்சுவலிப்பதாக பென்னிக்ஸ் கூற கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் வழியிலேயே பென்னிக்ஸ் உயிரிழந்துள்ளார்.

அடுத்து நாள் அதாவது இன்று காலை தந்தை ஜெயராஜும் உயிரிழந்தார்.

அப்பா மகன் என இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளத்தில் போலீஸாரைக் கண்டித்து வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சாத்தான்குளம் போலீசார் மீது நடவடிக்கை என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

இந்த நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்.

இவ்வாறு கமல்ஹாசன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் வெளியிட்ட அறிக்கையில்…

‘பெனிக்ஸ் என்பவரும், அவரது தந்தை ஜெயராஜ் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த படுகொலையை கண்டித்து நாளை ஒரு நாள் தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடையடைத்து நம்முடைய எதிர்ப்பை தெரியப்படுத்த வேண்டும்.

error: Content is protected !!