பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாச்சார மாநில செயலாளராக பிரபல இசையமைப்பாளர் தினா நியமிக்கப்பட்டார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் மாநில செயலாளராக இசையமைப்பாளர் தினா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பெப்சி தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் துணைத் தலைவராகவும் சினிமா இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார் இசையமைப்பாளர் தினா.

அதுமட்டுமில்லாது இப்போது வரை பெப்சி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் வளர்ச்சிக்காகவும் இசைக்கலைஞர்கள் நல்வாழ்வுக்காகவும் இன்றுவரை பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பான முதல் பாடல் சித்தி தொலைக்காட்சி தொடரிலும் இசை அமைத்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மிக பெரிய வெற்றி பெற்ற திருடா திருடி திரைப்படத்திலும் மற்றும் 90 திரைப்படங்கள் 380 தொலைக்காட்சி தொடர்களிலும் இசையமைத்துள்ளார்
இசையமைப்பாளர் தினா.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியிலும் தனது நற்பணியை நன்றாக செய்து வருவதாலே இந்தப் புதிய பொறுப்பை தலைமை இசையமைப்பாளர் தினா அவர்களுக்கு வழங்கியிருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி தந்திருக்கும் இந்த பொறுப்பை மிகுந்த பொறுப்போடு செயல்படுத்தும் ஆர்வத்தில் மகிழ்ச்சியோடு இருக்கிறார் இசையமைப்பாளர் தினா.

பாரதிய ஜனதா கட்சியில் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் என்னை மாநில செயலாளராக நியமனம் செய்த பாரதிய ஜனதா
கட்சியின் மேல் இடத்திற்கும் மாநில தலைவர் உயர்திரு. L.முருகன் அவர்களுக்கும் அமைப்பு பொது செயலாளர் உயர்திரு. கேசவவிநாயகம் அவர்களுக்கும்  மாநில துணை தலைவர் உயர்திரு. M N ராஜா அவர்களுக்கும் மாநில பொது செயலாளர் உயர்திரு. கரு நாகராஜன் அவர்களுக்கும் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில தலைவர் உயர்திரு. காயத்திரி ரகுராம் அவர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

error: Content is protected !!