உலகநாயகன் கமலஹாசனை இயக்குகிறாரா மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குநர்.?
மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் இயக்குநராக அறிமுகமாகி பெரும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படமாகும் முதல் திரைப்படமே மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு.
அதன்பின் கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
தற்போது தமிழ் தமிழ் திரைப்பட உலகில் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
அவருடைய இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸுக்கு அனைவராலும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட கொண்டிருக்கும் இந்த தருணத்தில் தற்போது ஓர் இன்ப அதிர்ச்சி தரும் மற்றொரு செய்தி வெளியாகி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்கு இயக்குநராக லோகேஷ் கனகராஜ் இணைய உள்ளார்
என்ற செய்தியை நமது இனையத்தில் படித்து இருப்போம்.
அந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உலக நாயகன் நடிகர் கமலஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிக்கப்பட உள்ளது.
என்ற செய்தியை இணையத்தில் பரவி வருகின்றன இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆர்வத்தையும் அதிர்ச்சியும் இதோடு நிறுத்தவில்லை என்னும் ஒரு இன்ப செய்தி வெளியாகியுள்ளது
உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு அரசியல் கதை களத்தை கொண்ட திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அந்த திரைப்படம் அடுத்த ஆண்டு தேர்தலுக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகநாயகன் கமலஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சி தொடங்கி அரசியலில் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இப்படி ஒரு திரைப்படம் ரெடியாக போகிறது.
என்பது ஒரு மாஸ்டர் பிளான் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படமும் அரசியல் சார்ந்த கதையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகநாயகன் கமலஹாசன் அரசியலிலும் சினிமாவிலும் பெரும் சாதனை செய்யப்போகிறாரா இல்லை அரசியலில் சாதனை செய்யப் போகிறாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.











