இறைவன் எனக்கு வரம் தரவில்லை கிருஷ்ணகாந்தாகவே வந்தார் திருடா திருடி திரைப்படம் தந்தார் இயக்குனர் சுப்பிரமணிய சிவா.
சென்னை: அக்டோபர் 2020
சினிமா பிரபலங்களுக்கு மட்டுமே இரங்கல் செய்தி வாசிக்கும் திரையுலகில் தன் திரையுலக வாழ்க்கையில் முதல் அடி எடுத்து வைப்பதற்கு இயக்குனர் வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர் முருகானந்தம் என்கிற கிருஷ்ணகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் திருடாதிருடி இயக்குனர் சுப்பிரமணிய சிவா பதிவு
நான் வேர் இல்லாத மரம். இறகு இல்லாத பறவை. துடுப்பு இல்லாத படகு இறைவன் எனக்கு வரம் தரவில்லை கிருஷ்ணகாந்தாகவே வந்தார் திருடா திருடி திரைப்படத்தை தந்தார்.
நான் உண்ணும் உணவு அவருடையது எல்லோரும் நல்லாயிருக்கவே எப்போதும் பேசுவார் சினிமாவை நம்பியே பொழுதெல்லாம் சுற்றுவார்
எதார்த்தமாக இருந்து ஏமார்ந்த ஏணிகளில் இவரும் ஒருவர் காலனே, உன் ஊரில் நல்லவர்கள் இல்லையா?
100 வரை எங்களுடன் வாழ வேண்டியவரை நேற்றுடன் உன்னுடன்
அழைத்து கொண்டாயே…. தப்பு செய்துவிட்டதாக பித்துபிடித்து அலைவாய் ஒருநாள் அய்யோ.. இனி
வாரம் 3 முறை யார் என் உயர்வு நலம்
விசாரிப்பார்.. அய்யோ..இனி யாரிடம் நான் ஆசி வாங்குவேன் ..சார் ..சத்தியம் கண்ணீரோடு சொல்கிறேன் இருக்கும் வரை உங்களை துதிப்பேன் .பிறகு சொர்க்கம் வந்து உங்களுடையே இருப்பேன் கிருஷ்ணகாந்த் சார்
உங்கள் குடும்பத்தாருடன் சேர்த்து என்னையும் ஆசீர்வதியுங்கள்.
உங்கள் நினைவுகளுடன் இயக்குநர் சுப்பிரமணிய சிவா











