கொரோனா சரியான பின்னரும் விஜயா மருத்துவமனை சிக்கிய தமிழன் திரைப்படத்தின் இயக்குனர் மஜீத்க்கு உதவிய தயாரிப்பாளர்கள் டி.சிவா கே.ஜே.ஆர். ராஜேஷ்.

தளபதி விஜய் நடிகை பிரியங்கா சோப்ரா, நாசர், ரேவதி, விவேக் நடித்த தமிழன் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் மஜீத்.

மேலும் பைசா என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

இவருக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாசிட்டிவ் என தெரிந்ததும் சென்னை வடபழனியில் உள்ள தனியார் விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

சேரும் போதே மஜீத்தின் மனைவி கொரோனா டிரீட்மெண்ட்டுக்கு மொத்த செலவு எவ்வளவு ஆகும்? என கேட்டுள்ளார்.

அதற்கு விஜயா மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ள ஒரு நபர் சொன்னது 2,80,000/- ரூபாய் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

உடனே தங்கள் கையிருப்பைக் மஜித்தின் மனைவி செக் செய்து, சரி ஓகே.. சிகிச்சையை ஆரம்பியுங்கள் என மஜித்தின் மனைவி தெரிவித்துள்ளார்.

சில தினங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பில் குணமானதும் பணத்தை செட்டில் செய்யக் தொகையை கேட்டபோது மருத்துவமனை நிர்வாகம் ஒருநாள் காத்திருக்கச் சொல்லி (கணக்குப் பார்ப்பதற்காக) சொன்ன நிர்வாகம் சொன்ன தொகை 3,40,000/- ரூபாய் என கூறியுள்ளார்கள்.

இதனையடுத்து மஜீத்தின் மனைவி நிறைய கேள்விகள் கேட்க கேட்க தொகை 4 லட்ச ரூபாயாக மாற்றியது மருத்துவமனை நிர்வாகம் .

இயக்குனர் மஜீத்தின் மனைவியும் வேறு வழியில்லாமல் சில நிர்வாகிகளிடம் விபரம் சொல்ல, தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் டி. சிவா அவர்கள் 80,000/- ரூபாய் ஏற்பாடு செய்து நேரடியாக விஜயா மருத்துவமனைக்கே பணத்தை அனுப்பி விட்டாராம்.

ஆனாலும் டிஸ்சார்ஸ் செய்யாமல் பிரச்சனை தொடர… இறுதியாக அவர்கள் கேட்கும் தொகை 4,65,000/- ரூபாய் என நிர்வாகம் கூறியுள்ளது.

இந்த விசயத்தை கேள்வி பட்டவுடன் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். ராஜேஷ் உடனடியாக மீதி உள்ள மொத்த தொகையையும் கட்டியுள்ளார்.

மீதமுள்ள மொத்த தொகையை செட்டில் செய்த பின்னர் இயக்குனர் மஜீத் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

கே.ஜே.ஆர.ராஜேஷ் தயாரித்த திரைப்படங்கள் நயன்தாரா நடித்த ஐரா திரைப்படமும் சிவகார்த்திகேயனின் நடித்த ஹீரோ இந்த இரண்டு திரைப்படமும் வெளியானது.

நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் க/பெ ரணசிங்கம்,
வைபவ் நடிக்கும் ஆலம்பனா அகிய
மற்றும் சிவகார்த்திகேயனின்
நடிக்கும் டாக்டர் திரைப்படங்களை கே.ஜே.ஆர். ராஜேஷ் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!