கிராமத்து களத்தில் புதுமுகங்களின் புது பயணம் அறிமுக இயக்குநர் செந்தில் கே. வீரய்யா இயக்கத்தில் உருவாகும் ‘மானிடன்’ !

கிராமத்து களத்தில் புதுமுகங்களின் புது பயணம் அறிமுக இயக்குநர் செந்தில் கே. வீரய்யா இயக்கத்தில் உருவாகும் ‘மானிடன்’ !

சென்னை 07 அக்டோபர் 2026 ஜேம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் செந்தில் கே.வீரய்யா இயக்கத்தில் மானிடன் திரைபபடம் உருவாகியுள்ளது.இதன் படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்ப்பட்டி மற்றும் புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊட்டி, தேனி போன்ற இடங்களிலும் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.இதில் வில்லன் கதாபாத்திரத்தில் சேரன் ராஜ் நடித்திருக்கிறார்.

மேலும் வேல்முருகன் காமெடி கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.ஊருக்கு நீதியையும் நியாயத்தையும் வழங்கும் ஊர் பெரியவர் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜேம்ஸ் அனைவரையும் கவரும் வகையில் சிறப்பாக நடித்திருக்கின்றார்கதையின் நாயகனாக தினேஷ் சந்திரா என்ற புதுமுக நடிகர் நடித்திருக்கிறார்.

நாயகியாக சினேகா என்ற புதுமுக நடிகை நடித்திருக்கிறார்.

இவர்களுடன் கண்ணபிரான் , பாஸ்கர் லட்சுமி. ராகவன்.மீசை ராஜா போன்ற புதுமுக நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவை சுரேஷ்ரங்கா கவனிக்க, எடிட்டிங் – R. செல்வராஜ். இசையை செளந்தர்யன், லோக பத்மநாபன் அமைத்திருக்கிறார்கள்.

பாடல்களை வ.கருப்பன் எழுதியிருக்கிறார்.நடனம் – ரத்னவேல்.

மக்கள் தொடர்பு: பெரு துளசி பழனிவேல்

இந்தப்படத்தை ஜேம்ஸ் இண்டர்நே.ஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜார்ஜ் வில்லியம்ஸ் தயாரித்திருக்கிறார்.பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய செந்தில் கே.வீரய்யா முதன்முறையாக இந்தப்படத்தை இயக்கி தமிழ்த் திரையுலகிற்கு புதிய இயக்குனராக அறிமுகமாகிறார்.

error: Content is protected !!