‘தாய்நிலம்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- டாக்டர் அமர் ராமச்சந்திரன், பாலா சிங், நேஹா அமர், நிமிஷா நம்பியார், தீபக், பத்மஜா அமர், நிஹால், குருதக்ஷிணா, தளபதி ஆனந்த் சரவணன் சொக்கம்பட்டி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அபிலாஷ் ஜி. தேவ்.

ஒளிப்பதிவாளர் :- பிரசாந்த் பிரணவம்.

படத்தொகுப்பாளர் :- தீஜோ பி. வர்கீஸ்.

இசையமைப்பாளர் :- ஔசேப்பச்சன்.

தயாரிப்பு நிறுவனம் :-  நெனி என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்.

தயாரிப்பாளர் :- டாக்டர் அமர் ராமச்சந்திரன்.

மக்கள் தொடர்பு :- சதீஷ் ( AIM )

வெளியீட்டு தேதி :- 09 அக்டோபர் அக்டோபர்  2026.

ரேட்டிங் :- 2./5.

தாய்நிலத்தை இழந்தாலும்  பாசத்தை இழக்காத தந்தை  மனதை நெகிழ வைக்கும் ‘தாய்நிலம்’ மனிதர்களின் வாழ்க்கையில் ‘தாய்நிலம்’ என்பது வெறும் ஒரு இடம் மட்டும் அல்ல.

அது நினைவுகள், உறவுகள், அடையாளம், பாசம் என அனைத்தையும் தன்னுள் சுமந்திருக்கும் ஒரு உணர்வு. அந்த உணர்வை மையமாக வைத்து, இலங்கைப் போரின் பின்னணியில் ஒரு தந்தை  மகளின் வாழ்க்கைப் போராட்டத்தை ‘தாய்நிலம்’ திரைப்படத்தை மிக மிக உணர்வுபூர்வமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ்.

தமிழ் திரைப்பட உலகில் போர், அகதி வாழ்க்கை, தாய்மண் மீதான பாசம் போன்ற உணர்வுகளை மையமாக வைத்து உருவாகும் திரைப்படங்கள் எப்போதுமே ஒரு கனமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

அந்த வரிசையில், இலங்கைப் போரின் பின்னணியில் ஒரு தந்தை–மகள் உறவை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தாய்நிலம்’.

இலங்கை உள்நாட்டுப் போரின் கொடூரமான சூழலில் தனது மனைவியை இழக்கும் கதாநாயகன், டாக்டர் அமர் ராமச்சந்திரன், தனது மகள் தமிழினியுடன் தாய்மண்ணை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்.

உயிரைக் காப்பாற்றிக் கொண்டு கடலைக் கடந்து தமிழ்நாட்டை அடையும் தந்தையும் மகளும், ராமேஸ்வரம் பகுதியில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க முயற்சிக்கிறார்கள்.

அதற்கிடையிலும் தனது மகளின் எதிர்காலம் மட்டும் சிறப்பாக இருக்க வேண்டும்.

புதிய இடம்… புதிய மனிதர்கள்… அறிமுகமில்லாத சூழல்… வாழ்வாதாரப் போராட்டம்… சமூகத்தின் பார்வை… எதிர்காலம் குறித்த அச்சம்… இவற்றுக்கு நடுவில், தனது மகளின் எதிர்காலத்திற்காக அனைத்தையும் தாங்கிக்கொண்டு நிற்கும் ஒரு தந்தையின் போராட்டம்தான் இந்த ‘தாய் நிலம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இது ‘தாய் நிலம் ‘ கதாபாத்திரத்தில் கதாநாயகனாக டாக்டர் அமர் ராமச்சந்திரன், நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் டாக்டர் அமர் ராமச்சந்திரன்,  தன்னுடைய மண்ணை விட்டு வந்த வழியும் தன் மனைவியை பிரிந்த வலியும் தனது ஒற்றை மகளை பாதுகாக்க இப்படி எல்லாம் பாடுகிறார் என அவருடைய இயல்பான நடிப்பு மூலம் காண்பித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் டாக்டர் அமர் ராமச்சந்திரன், மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குருதக்ஷிணா மிக மிக அருமையாக நடித்திருக்கிறார்.

பெட்டுகளை வைத்திருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலசிங் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நேஹா அமர், நிமிஷா நம்பியார், தீபக், பத்மஜா அமர், நிஹால், தளபதி ஆனந்த் சரவணன் சொக்கம்பட்டி, அனைவருக்கும் கொடுக்கப்பட்ட வேலையை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் :- பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பாக திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர்  ஔசேப்பச்சன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

தாய்நிலம்’ திரைப்படம் இலங்கை உள்நாட்டுப் போரின் பின்னணியில், தந்தை–மகள் உறவையும், இடம்பெயர்வுக்குப் பிறகு அவர்கள் தேடும் அமைதியையும் மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது.

மொத்தத்தில், அமைதியான திரைக்கதையின் மூலம் ஆழமான உணர்வுகளை கடத்தும் ஒரு முக்கியமான தமிழ் திரைப்படம் ‘தாய்நிலம்’.

error: Content is protected !!