‘ஆட்டி’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- இசக்கி கார்வண்ணன் , அபி நட்சத்திரம், காதல் சுகுமார், சௌந்தர், செல்வகுமார், பிரவீன் பழனிச்சாமி, கரண் சக்கரவர்த்தி, அவன் கிருஷ்ணா, சித்து குமரேசன், ஆனந்த் சௌந்தராஜன், நேசன், குயிலி நாச்சியார், உதய சுமதி, நிலா, சுமுத்ரா தேவி, ஆஷிகா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- எல்.கிட்டு.

ஒளிப்பதிவாளர் :- சிபி சதாசிவம்.

படத்தொகுப்பாளர் :- சி.எம். இளங்கோவன்.

இசையமைப்பாளர் :- தீசன்.

தயாரிப்பு நிறுவனம் :- லட்சுமி கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- இசக்கி கார்வண்ணன்.

மக்கள் தொடர்பு :- ஏ.ஜான்.

ரேட்டிங் :- 2.5./5.

பழங்காலத்தில் மதுரை மாவட்டத்தில் கோடைமலை பகுதியில் பெண் தெய்வங்களை வழிபடும் பழக்கம் இருந்து வருகிறது.

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கொலை செய்து பழிதீர்த்த பெண்களை  கடவுளாக வணங்கி வருகிறார்கள்.

தேயிலைத் தோட்டங்கள் அதிகம் உள்ள மலைப்பகுதியில் உள்ள மலை கிராமத்தில் பழங்காலமாக  இருக்கும் காவல் நிலையத்திற்கு கதாநாயகன் இசக்கி கார்வண்ணன், காவல்துறை ஆய்வாளராக வருகிறார்.

எந்தவிதமான குற்றங்களும் நடக்காத மலை கிராம பகுதியில் எதற்காக இந்த காவல்நிலையம் என்ற கேள்வியுடன் அதற்கான விடையைத் கதாநாயகன் இசக்கி கார்வண்ணன் தேடுகிறார்.

அபி நட்சத்திரம், மலை கிராமத்தில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டு அரசாங்கத்திற்கு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு எங்கள் மலை கிராமத்திற்கு ஒரு ஆசிரியர் தேவை என மனுப்போட தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக பள்ளிக்கு ஆசிரியராக வரும் பிரவீன் பழனிசாமி, திடீரென கொல்லப்பட்டு கிடக்கிறார்.

இந்த நிலையில் இது தொடர்பான ஆசிரியர் பிரவீன் பழனிசாமி, கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடிக்க  விசாரணையில் கதாநாயகன் இசக்கி கார்வண்ணன் இறங்குகிறார்.

அந்த ஆசிரியர் பிரவீன் பழனிசாமியை கொலை செய்தவர் யார்?

உங்க ஆசிரியர் பிரவீன் பழனிசாமி,கொலை செய்ததற்கான காரணம் என்ன?

கதாநாயகன் இசக்கி கார்வண்ணன் மலை கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு புதிதாக வந்த ஆசிரியர் பிரவீன் பழனிசாமி, கொலை செய்த குற்றவாளியை கதாநாயகன் இசக்கி கார்வண்ணன் கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த ஆட்டி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஆட்டி திரைப்படத்தில் கதாநாயகனாக இசக்கி கார்வண்ணன் நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன், அதிகம் காவல் துறையினர் மிடுக்கைக் காட்டாமல் சாதாரண மனிதரைப் போல நடந்துகொள்வது நடிப்பில் அனுபவம் கூடிவரவேண்டும்.

அபி நட்சத்திரம், கதாபாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

அந்த கிராமத்தில் அபி நட்சத்திரம், மட்டுமே படித்தவர் என்று இந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் செல்லம் காட்டுகிறார்கள்.

அந்த கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் சுகுமார், அந்த கிராமத்தில் தபால்காரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சௌந்தர், செல்வகுமார், பிரவீன் பழனிச்சாமி, கரண் சக்கரவர்த்தி, அவன் கிருஷ்ணா, சித்து குமரேசன், ஆனந்த் சௌந்தராஜன், நேசன், குயிலி நாச்சியார், உதய சுமதி, நிலா, சுமுத்ரா தேவி, ஆஷிகா, அனைவரும் மிக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு மூலம் மலைப்பகுதியில் உள்ள இயற்கை அழகை மிகவும் நேர்த்தியாக காட்சிப்படுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் தீசன் இசையில் பாடல்கள் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதாக உதவவில்லை என்றாலும் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

1970-காலகட்டங்களில் ஒரு மலைவாழ் கிராமத்தை பின்னணியாக கதையை  உருவாக்கிய இயக்குனர் கிட்டு. பெண்களுக்கு எதிரான அநீதிகள், அதை எதிர்த்து போராடும் பெண்களின் சக்தி, ஒரு மர்ம கொலை மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் ரகசியங்கள் ஆகியவற்றை மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் எல் கிட்டு.

மொத்தத்தில் இந்த ஆட்டி திரைப்படம் பார்க்கலாம்.

error: Content is protected !!