‘நிழல்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- கௌசிக், விசாகன், ஜனனி, ஹரி விஜய், ரமேஷ் கண்ணா, திவ்யா கிருஷ்ணன், அபிஷேக் சங்கர், சபிதா ஆனந்த், சிவன் ஸ்ரீனிவாசன், திலீபன், பாய்ஸ் ராஜன், யுவஸ்ரீ சண்முகம், தீபிகா (டீடோல்), காவ்யா அமைரா, அறந்தாங்கி மஞ்சுளா, பத்மினி, எஸ்.கே.குரு, ஜி.விக்னேஷ், பிரபாகரன், ராஜகுமாரி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- என.கே. குமார்.
ஒளிப்பதிவாளர் :- மோகன் குமார் பழனிவேல்.
படத்தொகுப்பாளர் :- தினேஷ்குமார்.
இசையமைப்பாளர் :- எம்.அபுபக்கர்.
தயாரிப்பு நிறுவனம் :- ஏ கே மூவிஸ்.
தயாரிப்பாளர்கள் :- மணிகண்டன் குப்பன், எம் ஜோதி பாண்டியன்.
மக்கள் தொடர்பு :- உதய்.
ரேட்டிங் :- 2.75./5.
பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களை மையமாகக் கொண்ட சமூகக் கருத்துடைய திரைபபடமாகும்.
கதாநாயகி ஜனனி ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
காவல்துறை துணை ஆய்வாளரான கதாநாயகன் விசாகனை கதாநாயகி ஜனனி உயிருக்கு உயிராய் இருவரும் காதலித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கதாநாயகி ஜனனி மருத்துவராக பணிபுரிந்து வரும் மருத்துவமனையில் பெண் ஒருவரை கற்பழித்து கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்படுகிறார்.
மருத்துவமனை நடத்தி வரும் மிகப்பெரிய தொழிலதிபரான சிவன் சீனிவாசனின் மகன் ஹரி விஜய் மற்றும் அவருடைய நண்பர்கள் இனைத்து கதாநாயகி ஜனனியை கொடூரமான முறையில் எழுந்து நடக்க முடியாத அளவிற்கு தாக்கி விடுகிறார்கள்.
இந்நிலையில் கொடூரமாக தாக்கப்பட்ட கதாநாயகி ஜனனியை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இதனை எடுத்து தொழிலதிபர் சிவன் சீனிவாசனின் மகன் ஹரி விஜய் மற்றும் அவருடைய நண்பர்கள் மூவரையும் சாகும் அளவிற்கு தாக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் காவல்துறை துணை ஆய்வாளரான கதாநாயகன் விசாகன் இந்த இந்த வழக்கை எடுத்து விசாரிக்க இவர்கள் மூவரின் கொடூரமாக தாக்கியது யார்? என்பதை விசாரிக்க தொடங்குகிறார்
இறுதியில் தொழிலதிபர் சிவன் சீனிவாசனின் மகன் ஹரி விஜய் மற்றும் அவருடைய நண்பர்கள் மூவரையும் சாகும் அளவிற்கு தாக்கியதற்கான காரணம் என்ன? இவர்கள் மூவரும் தாக்கியவர்களை காவல்துறை துணை ஆய்வாளரான கதாநாயகன் விசாகன் கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த ’நிழல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ’நிழல்’ திரைப்படத்தில் கதாநாயகியாக பிக் பாஸ் ஜனனி நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பிக் பாஸ் ஜனனி இரட்டை கதாபாத்திரங்களில் கதைக்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பிக் பாஸ் ஜனனி அதிலும் டாக்டர் கதாபாத்திரத்தில் வரும் மனதை உருக வைத்து விட்டார். மற்றொரு கதாபாத்திரம் பதற வைக்கிறது.
இந்த நிழல் திரைப்படத்தில் கதாநாயகனாக விசாகன் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விசாகன் காவல்துறை துணை ஆய்வாளர் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார்.
கிளைமாக்சில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கௌசிக் ரசிக்க வைக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் ஹரி, அவர் நண்பர்கள் நடிப்பு, அவர் செய்யும் செயல்கள் கொடூரம்.
கதாநாயகி ஜனனி தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரமேஷ் கண்ணா பாசத்தை பொழிகிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் ஹரி, அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை சீரியல் வில்லி மாதிரி வந்து போகிறார்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் திவ்யா கிருஷ்ணன், அபிஷேக் சங்கர், சபிதா ஆனந்த், சிவன் ஸ்ரீனிவாசன், திலீபன், பாய்ஸ் ராஜன், யுவஸ்ரீ சண்முகம், தீபிகா (டீடோல்), காவ்யா அமைரா, அறந்தாங்கி மஞ்சுளா, பத்மினி, எஸ்.கே.குரு, ஜி.விக்னேஷ், பிரபாகரன், ராஜகுமாரி, அனைத்து கதாபத்திரங்களும் மிகவும் சிறப்பாக நடத்தி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மோகன் குமார் பழனிச்சாமி ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம்.
இசையமைப்பாளர் அபுபக்கர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே ரகம்.
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை, அதிகார வர்க்கத்தின் அத்து மீறல், காவல்துறையினரின் பாரபட்சம் ஆகியவை குறித்த அருமையான கதை ஆனால் திரைக்கதை மிகச் சிறப்பாக அமைந்திருந்தால் சிறந்த ஒரு திரைப்படமாக அமைந்திருக்கும்.
பெண்கள் மீதான தாக்குதலுக்கு கடும் தண்டனை வேண்டும். சட்டத்தின் பிடியில் இருந்து சம்பந்தப்பட்ட வர்கள் தப்பித்தாலும் அவர்களுக்கு தண்டனை தரப்பட வேண்டும் என்ற கரு மட்டும் மனதில் நிற்கும் அளவிற்கு இயக்கியிருக்கிறார் இயக்குனர் என.கே. குமார்.
மொத்தத்தில், ‘நிழல்’ திரைப்படம் இன்னும் கொஞ்சம் கதை திரைக்கதை மற்றும் நடிகர் நடிகைகளின் தேர்வில் மெனக்கெட்டு இருந்தால் சிறந்த ஒரு திரைப்படமாக அமைந்திருக்கும்.



