நடிகர் ஆதேஷ் பாலா கதாநாயகனாக நடிக்கும் கால்கேர்ள் திரைப்படம் விரைவில் திரையில் வரஉள்ளது!!
சென்னை 06 செப்டம்பர் 2022 நடிகர் ஆதேஷ் பாலா கதாநாயகனாக நடிக்கும் கால்கேர்ள் திரைப்படம் விரைவில் திரையில் வரஉள்ளது!!
நீண்ட நாள் திருமணமாகத 80 s Kids நாயகனுக்கு திடீரென்று காதல் கைகூட சந்தோஷத்தில் திக்குமுக்காடும் நேரத்தில் அவன் காதலிக்கும் பெண்ணின் செயலால் திருமணம் நின்று போக.
மனமுடைந்த நாயகன் என்ன ஆனான் என்பதையும் மீண்டும் தடைபட்ட திருமணம் நடந்தேறியதா என்பதையும் திருமணமாகாத 80 “s kids இளைஞர்கள் படும் பாட்டை முழுக்க முழுக்க நகைச்சுவையோடு கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும் கால்கேர்ள் எனும் இத்திரைப்படத்தில் நாயகனாய் நடிகர் ஆதேஷ் பாலாவும் நாயகியாய் நடிகை ஜெசியும் மற்றும் சிரிக்கோ உதய் லொள்ளுசபா புகழ் சதீஷ்,வெங்கட்ராஜ்,நாதஸ்வரம் புகழ் சுதா புஷ்பா,அபர்னா,சாதுவன் நடிக்க பாபு.கே. செல்வராஜன் ஒளிப்பதிவில் S.சதீஷ்குமார் இசையில் sriராம் விக்னேஷ் படத்தொகுப்பில் இயக்குனர் விஜய் மணி இயக்கத்தில் பூஜாலட்சுமி பிலிம்ஸ் சார்பில் வி.சாதுவன் தயாரிப்பில் இப்படம் உருவாகி விரைவில் திரையில் வர தயாராக உள்ளது











