நடிகர் அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர் ஒன் திரைப்படம்  திரையிட்ட திரையரங்குகள் அனைத்திலும் குடும்பம் குடும்பமாக கொண்டாடி வருகிறார்கள் !!

நடிகர் அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர் ஒன் திரைப்படம்  திரையிட்ட திரையரங்குகள் அனைத்திலும் குடும்பம் குடும்பமாக கொண்டாடி வருகிறார்கள் !!

சென்னை 17 ஜனவரி 2024 தமிழ் திரைப்பட பலருடைய முயற்சியிலும் கடின உழைப்பிலும் உருவாகும் படைப்புகள் இன்று திரையரங்கிற்கு கொண்டு வருவது என்பது  சவாலான ஒன்று.

சத்யஜோதி பிலிம்ஸ் ஜி தியாகராஜன் தயாரிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’, கே ஜே ஆர் தயாரிப்பில் இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான்’ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் மெரி கிறிஸ்மஸ் மற்றும் ஹனுமான்  எந்தத் திரைப்படம் வெற்றி திரைப்படம் அமையும் என பலரும் வெற்றியை எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் ‘மிஷன் சாப்டர் ஒன்’ அச்சம் என்பது இல்லையே திரைப்படம்  துணிச்சலுடன் வந்து சத்தமில்லாமல் நடிகர் அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் ஒன் அச்சம் என்பது இல்லையே திரைப்படம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் மெரி கிறிஸ்மஸ் மற்றும் ஹனுமான் பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படங்களில் பொங்கல் ரேஸில் அதிக திரையரங்குகளை ஆக்கிரமித்த நிலையில், தனக்கு கிடைத்த திரையரங்குகளில் மிஷன் சாப்டர் ஒன் அச்சம் என்பது இல்லையே திரைப்படம் தனது வெற்றி பயணத்தை துவங்கியது

பல வகையான துப்பாக்கி சத்தத்துடன் கூடிய பக்கா ஆக்சன் திரைப்படமாக அமைந்து இளைஞர்களை கவர்ந்தது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர்.

அதிக அளவில் கிராபிக்ஸ் காட்சிகளை அரங்கேற்றி குழந்தைகளை கொண்டாட வைத்தது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘அயலான்’ விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மெரி கிறிஸ்மஸ், இவை மூன்றையும் தாண்டி எப்போதும் தோற்றுப் போகாத கதை தந்தை மகள் பாசத்தை கையில் எடுத்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்தது நடிகர் அருண் விஜயின் நடிப்பில் மிஷன் சாப்டர் ஒன் அச்சம் என்பது இல்லையே.

அதிக அளவில் பெரிய பட்ஜெட்டில் லண்டன் சிறை சாலையை அப்படியே அச்சு அசலாக  தமிழகத்தில் செட்டு  அமைத்து கதையை மட்டுமே நம்பி களமிறங்கி விறுவிறுப்பான வியூகங்களுடன் கதையை கச்சிதமாக அமைத்து மகளைக் காப்பாற்றியது போல் திரைப்படத்தை நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் விஜய்  இருவரும் காப்பாற்றி விட்டார்கள்.

மிஷன் சாப்டர் ஒன் அச்சம் என்பது இல்லையே. திரைப்படம் வெளியான நாளில் இருந்து தொடர்ந்து ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் என்பதைப் போல தினம் தினம் ஏறுமுகமாகவே இருக்கிறது.

திரையரங்குகளும் சரி வசூலிலும் சரி  வாரி  குவித்து கொண்டிருக்கிறது.

பிரம்மாண்ட மெகா பட்ஜெட்  திகைக்க வைக்கும் தொழில்நுட்பம் என பல பில்டப்புகளை கொடுத்து  ஹைப்பை எகிற வைத்த திரைப்படங்களுக்கு மத்தியில் 25 கோடி செலவில் நிறைவாக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் நாலு நாட்களில் பல  கோடிக்கும் மேல் அதிகமான வசூலை செய்து உள்ளது.

குறைவான எண்ணிக்கையில் திரையிடப்பட்ட இந்த மிஷன் சாப்டர் ஒன் அச்சம் என்பது இல்லையே. முதல் நாளில் இருந்தே  டிக்கெட் புக்கிங் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து படிப்படியாக பல மடங்குகளாக உயர்ந்தது என்பது நிதர்சனமான உண்மை.

கதை, மற்றும் வசூல், வாடிக்கையாளர்களின் அதிக அளவில் திரையரங்குகளின் எண்ணிக்கை என அனைத்திலும் மிஷன் சாப்டர் ஒன் அச்சம் என்பது இல்லையே முதலாக வந்துள்ளது.

அயலான் மற்றும் கேப்டன் மில்லருக்கு மத்தியில் தில்லாக நின்று இந்த 2024 வருட பொங்கலில் தனது வெற்றியை அழுத்தமாக நிலை நிறுத்திவிட்டார் நடிகர் அருண் விஜய்.