மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே திரைவிமர்சனம் ரேட்டிங் 3.5./5.

நடிகர் & நடிகைகள் :- அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- விஜய்.

ஒளிப்பதிவாளர் :- சந்தீப் கே விஜய்.

படத்தொகுப்பாளர் :- ஆண்டனி.

இசையமைப்பாளர் :- .வி. பிரகாஷ் குமார்.

தயாரிப்பு நிறுவனம் :- லைகா புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- சுபாஸ்கரன், எம். ராஜசேகர் – எஸ்.சுவாதி சூர்யா வம்சி பிரசாத் கோத்தா – ஜீவன் கோத்தா

ரேட்டிங் :- 3.5/ 5.

கோயம்பதூரில் வசித்து வரும் கதாநாயகன் அருண் விஜய் தன் ஜந்து வயது மகளின் ஆப்ரேஷன் செய்வதற்காக  லண்டன்  செல்ல கிளம்புகிறார்.

தன் மகளின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதால் தன்னிடம் உள்ள நிலங்களை தனது நண்பன் மூலம் விற்று பணத்தை ரெடி பண்ணுகிறார்.

மருத்துவ செலவுக்காக ரெடி பண்ணிய 30 லட்சம் ரூபாய் பணத்தை லண்டனிற்கு நேரடியாக எடுத்து செல்ல முடியாது என்பதால் ஒருவரிடம் கொடுத்து ஹவாலா மூலம் லண்டனில் தான் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்.

அந்த நபர் கதாநாயகன் அருண் விஜய்யிடம் பத்து ரூபாய நோட்டு ஒன்று கொடுக்க இந்த நோட்டை லண்டனில் உள்ள இந்த விலாசத்தில் கொடுத்தால் உங்களுக்கு நீங்கள் கொடுத்த முப்பது லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என கூறுகிறார்.

கதாநாயகன் அருண் விஜயின் செல்ல மகளின் சிகிச்சையை லண்டனில், உள்ள மருத்துவமனையில் சிகிச்சையை தொடங்குகிறார்கள்.

இன்னொருபுறம் இருக்க G 20 மாநாட்டில் கலந்து கொள்ளும் அரசியல் தலைவர்களை அழிக்க தீவிரவாதி கும்பல் சதி திட்டம் தீட்டுகிறது.

இதையடுத்து தன் மகளின் சிகிச்சைக்காக செல்லும் லண்டன மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் நிமிஷா சஜயன் கதாநாயகன் அருண் விஜய்க்கு உதவி செய்கிறார்.

அதே மருத்துவமனையில் நிமிஷா சஜயனின் தம்பியும் வேலை பார்க்கிறார்.

நிமிஷா சஜயனின் தம்பி கதாநாயகன் அருண் விஜயிடம் இருக்கும் பத்து ரூபாய் நோட்டின் மூலம் 30 லட்சம் ரூபாய் கிடைக்கும் என தெரிந்து கொள்கிறான்.

இந்த நிலையில் நிமிஷா சஜயனின் தம்பி கதாநாயகன் அருண் விஜய்யை பணம் மாற்றுவதற்கான விலாசத்தில் தேடிக் கொண்டிருக்கிற அந்த நேரத்தில் பஸ்ஸில் அழைத்து செல்கிறார்.

இந்த நேரத்தில் பஸ்ஸில் சில ரவுடிகள் ரூபாய் நோட்டு இருக்கும் பர்ஸை ஒருவன் திருடு விட அந்த ரூபாய் நோட்டு உள்ள பர்ஸை மீட்கும் முயற்சியில் அந்த ரவுடிகளை அழித்து துவம்சம் செய்கிறார்.

மற்றொருபுறம் தீவிரவாதி கும்பலில் ஒருவன் மருத்துவமனையில் கதாநாயகன் அருண் விஜய்யை பார்த்துவிட்டு பதறி போய் தன் தலைவனுக்கு போன் செய்யும் நேரம் அவன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான்.

சண்டை நடப்பதை பார்த்த காவல்துறையினர் கதாநாயகன் அருண் விஜய்யை காவல்துறையினர் பிடிக்க வரும்போது ஒரு காவல்துறை அதிகாரியை அடித்து விடுகிறார் அதனால் கடுப்பான காவல்துறை அதிகாரி கதாநாயகன் அருண் விஜய் கைது செய்து சிறையில் அடைகிறார்கள்.

இறுதியில் கதாநாயகன் அருண் விஜய் சிறை சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டாரா? இல்லை விடுவிக்கப்படவில்லையா? கதாநாயகன் அருண் விஜய் தீவிரவாதிகள் சதித்திட்டத்தை முறியடித்தாரா? முறியடிக்கவில்லையா? கதாநாயகன் அருண் விஜயின் மகளின் மருத்துவ நல்லபடியாக முடிந்ததா? முடியவில்லையா?
என்பதுதான் இந்த மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே திரைப்படத்தில் கதாநாயகனாக அருண் விஜய் நடித்திருக்கிறார்.

ஆக்‌ஷன் காட்சிகள் என்றாலே கதாநாயகன் அருண் விஜய்க்கு அல்வா சாப்பிடுவது போல் இந்தத் திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகளில் தெறிக்கவிடும் கதாநாயகன் அருண் விஜய் இந்த மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே திரைப்படத்திலும் சிறப்பாகவே நடித்துள்ளார்.

கதாநாயகன் அருண் விஜய், லண்டன் உள்ள சிறைச்சாலையில் ஆக்‌ஷன் அவதாரம் பிரமிக்க வைகிறது.

ஒவ்வொரு காட்சியிலும் மிக கடுமையான உழைப்பை கொடுத்து, பல ஆக்‌ஷன் காட்சிகளை கதாநாயகன் அருண் விஜய் ரியலாக செய்து அசத்தியிருக்கிறார்.

இந்த மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே திரைப்படத்தில் கதாநாயகியாக எபி ஜாக்சன் நடித்து இருக்கிறார்.

சிறைச்சாலை இருக்கும் ஜெயிலராக நடித்திருக்கும் எமி ஜாக்சன், சில அதிரடி காட்சிகளில் அமர்க்களப்படுத்தினாலும், பெரும்பாலும் கதாநாயகன் அருண் விஜய் செய்யும் சாகசங்களை வேடிக்கை பார்ப்பதையே வேலையாக வைத்திருக்கிறார்.

லண்டன் மருத்துவமனையில் நர்சாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன் கொடுத்த வேலையை நடிப்பின் மூலம் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

வில்லனாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பரத் போபண்ணா, கதாநாயகன் அருண் விஜய்க்கு உதவி செய்யும் சர்தார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபி ஹாசன், விரஜ், ஜேசன் ஷா, சிறுமி இயல் என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அளவான நடிப்பின் மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சந்தீப் கே.விஜயனின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளையும் நேர்த்தியாக திரைப்படமாக்கி திரைப்பட ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் திரும்ப திரும்ப கேட்க வைக்கும் மெலோடியாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசை திரைப்படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

படத்தொகுப்பாளர் ஆண்டனியின் படத்தொகுப்பு பணி திரைப்படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

ஒரு சிறைச்சாலைக்குள் நடக்கும் ஆக்‌ஷன் சம்பவத்தை மையமான கதையை வைத்துக்கொண்டு அதற்கு மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து திரைப்படத்தை மிகவும் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் விஜய்.

மொத்தத்தில், மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே திரைப்படம் ஆக்‌ஷன் விரும்பும் திரைப்பட ரசிகர்களுக்கு நடிகர் அருண் விஜயின் பொங்கல் ஆக்சன் விருந்து.

error: Content is protected !!