தனது திருமணத்தை உறுதிப்படுத்தினார் நடிகர் கௌதம் கார்த்திக்!!

சென்னை 19 ஆகஸ்ட் 2022 தனது திருமணத்தை உறுதிபடுத்தினார் நடிகர் கௌதம் கார்த்திக்.!!

பழம்பெரும் நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் மூத்த மகன் கௌதம் கார்த்திக் தமிழ் திரைப்பட உலகில் தனக்கென ஒரு நல்ல பெயரை உருவாக்கியுள்ளார்.

நல்ல திரைப்படங்களில் நடிக்கும் இளம் நட்சத்திரங்களில் ஒருவர்தான் கௌதம் கார்த்திக்.

தேவராட்டம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தப்போது நடிகர் கௌதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன் வதந்திகள் பரவத் தொடங்கின.

இரண்டு பிரபலங்களின் சமூக ஊடகங்களில் பேச்சி எழுந்தன, ஆனால் நடிகை மஞ்சிமா மோகன் இந்த செய்தியை மறுத்து, இதனால் தனது பெற்றோர் மனதை காயப்படுத்தியதாகக் கூறினார்.

நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் தனக்கு இந்த வருடம் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி செய்துள்ளார்.

ஆனால் நடிகர் கௌதம் கார்த்திக் திருமணம் செய்து கொள்ளும் மணமகள் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்கவிருக்கும் திரைப்படங்களில் ‘1947 ஆகஸ்ட் 16’ என்ற திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கிறார்.

நடிகர் கௌதம் கார்த்தி்க், சிம்பு மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படத்தை ஒபேலி N. கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நடிகர் கௌதம் கார்த்திக் திருமணம் செய்து கொள்ளும் பெண் யார் என்பது நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

error: Content is protected !!