நடிகர் ஜீவாவின் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் வெளியீடு இந்த நிறுவனம் சுயாதீன கலைஞர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளது !!
அவரது ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ ரெக்கார்ட்ஸ் மியூசிக் லேபிள் என்ற புதிய முயற்சியின் துவக்க விழா, சுதந்திரக் கலைஞர்களுக்கு அர்ப்பணித்து, அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தளத்தை வழங்கும் நிகழ்ச்சி, ஊடகங்கள் மற்றும் நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், மிர்ச்சி சிவா,விச்சு விஸ்வநாத், விவேக் பிரசன்னா, கலையரசன்,ஆதவ் கண்ணதாசன், ஜெகன், இயக்குனர் மோகன்.G, நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, சித்தார்த் விபின், சந்தோஷ் நாராயணன் மற்றும் பல பிரபலங்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
பெரும்பாலும் முக்கிய கதையமைப்புகளால் ஆதிக்கம் செலுத்தும் ஒரு துறையில், எங்கள் மியூசிக் லேபிள் படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தை வளர்ப்பதில் உறுதியாக உள்ளது.
ஒவ்வொரு கலைஞரும் பிரகாசிக்கவும், அவர்களின் தனித்துவமான குரலை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவும் தகுதியானவர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
எங்கள் தளம் உருவாக்கம் முதல் உலகளாவிய அங்கீகாரம் வரை, அவர்களின் இசைக் கலைஞர் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் சுயாதீன கலைஞர்களை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பலதரப்பட்ட இசை பாணிகள் மற்றும் வகைகளைத் தழுவி உருவாக்குவதன் மூலம், இசைத் துறையின் செழுமைக்கும் அதிர்வுக்கும் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
நிகழ்வில் நடிகர் ஜீவா பேசுகையில்…
இந்நிறுவனம் கலைக்கூடராமாக இருக்கும்” என அனைவரையும் வரவேற்று பேசினார்.
சந்தோஷ் நாராயணன் பேசுகையில்…
பின்னர் கில்லா.கே என்பவரின் சுயாதீன கலைஞரின் ‘புரிய வை’ பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்கள் வெளியிட்டு பேசும்பொழுது தனது மிகப்பெரிய சுயாதீன பாடலாக ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் அமைந்ததாகவும் தானும் ஒரு மியூசிக் லேபிள் நிறுவனம் ஆரம்பிக்க இருப்பதாகவும் ஜீவா போன்றவர்கள் மியூசிக் லேபிள் நிறுவனம் தொடங்கி இருப்பது ஒரே நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பதற்கு உதவிஆக இருக்கும். பின்னர் ஜீவா போன்றவர்கள் இந்த துறையில் நுழைவது மகிழ்ச்சியடைகிறேன்.
அவர்களுக்கான மேடையாக இந்த ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் நிறுவனம் அமையும் என்று வாழ்த்தினார்.
நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில்…
‘பனிமேல் விழும் கனல் காற்று’ என்ற குறும்படத்தை வெளியிட்டு பேசிய விஷ்ணு விஷால் திரை வாழ்க்கையை துவங்கும்போது வாய்ப்புக்காக நிறைய அலைந்திருப்பதாகவும் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் திரைத்துறைக்கு வந்து 15 வருடங்களை நிறைவு செய்ததாகவும், 13 ஆண்டுகள் ஜீவாவுடன் நட்பு இருப்பதாகவும் சினிமாவில் நிறைய வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அந்த வாய்ப்புக்கான சரியான வழியை புதிய இளம்தலைமுறை சுயாதீன கலைஞர்களுக்கு இந்த மாதிரியான ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மூலம் உருவாக்கி உள்ளார்.
தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
நடிகர் கார்த்தி பேசுகையில்…
நடிகர் கார்த்தி ‘த’ பாப் சுயாதீன பாடலை வெளியிட்டு பேசும் பொழுது ‘த’ பாப் எனப்படும் நம் தமிழ் பெண்கள் சிறப்பாக பாடுகிறார்கள், ஆடுகிறார்கள், அவர்களே இசைக்கோர்வை சேர்க்கிறார்கள் இது போன்ற வாய்ப்புகளை தேடும் திறமையாளர்களுக்கு புதிய முகவரி எனக்கு கிடைத்திருக்கிறது.
அதுபோல சுயாதீன கலைஞர்களின் ஆர்வத்திற்கு ஊக்கமளித்த பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
நடிகர் ஜெயம் ரவி பேசுகையில்…
சுயாதீன பாடகர் கென்னிஷா அவர்களின் ‘இதை யார் சொல்வாரோ’ என்ற பாடலை நடிகர் ஜெயம் ரவி வெளியீட்டு பேசும் பொழுது சமூக வலைத்தளங்கள் வாய்ப்புகளை பெறுவதற்கு ஒரு சுலபமான வழியாக உள்ளது.
இந்த டெஃப் ஃப்ராக்ஸ் நிறுவனம் மென்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
நடிகர் தயாரிப்பாளர் ஜசரி.K.கணேஷ் பேசுகையில்…
‘Folk Agenda’ ஆவணத் திரைப்படத்தை வெளியிட்டு பேசிய திரு.ஐசரி.கே.கணேஷ் அவர்கள் நடிகர் ஜீவா அவர்களிடம் செல்லமாக கோபித்துக் கொண்டார்.
பிரதீப் ரங்கநாதன் போன்ற புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்துகிறார்” என்றார்.
நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில்…
விஜய் ஆண்டனி அவர்கள் பேசும் பொழுது அவர் வெளியிட்ட’ஒவ்வொரு பெண்ணுக்கும்’ சுயாதீனப் பாடலில் பணிபுரிந்தவர்கள் திறமையை வெளிப்படுத்தி இருப்பதாகவும் தானும் ஒரு ‘டெஃப் ஃப்ராக்’தான் என்றும் யாருடைய பேச்சையும் பொருட்படுத்தாமல் இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குனராக அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி வந்ததாக கூறினார்.
நமக்கென்று ஒரு நம்பிக்கை இருந்தால் நாம் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
இந்த மாதிரியான நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ள ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
நடிகர் ‘மிர்ச்சி’ சிவா பேசுகையில்…
‘ஏக் லடுக்கா ஏக் லடுக்கி’ எனும் குறும்படத்தை வெளியிட்டு பேசிய ‘மிர்ச்சி’சிவா அவர்கள் “திறமை என்றும் ஒளித்து வைக்க முடியாது.
‘டெஃப் ஃப்ராக்ஸ்’ உலக அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
நடிகர் கலையரசன் & ஆதவ் கண்ணதாசன் பேசுகையில்…
‘இனியன்’ நடித்துள்ள ‘Funtastic’ என்னும் இணைய தொடரின் முன்னோட்டத்தை வெளியிட்டு பேசிய கலையரசன் மற்றும் கண்ணதாசன் இருவரும் படக்குழுவினரை வாழ்த்தினர்.