நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவுக்கு ஓராண்டு சிறை சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
சென்னை 07 ஏப்ரல் 2021
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவுக்கு ஓராண்டு சிறை சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
தமிழ் திரைப்பட உலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சரத்குமார் & நடிகை ராதிகா தம்பதியினர்.
ராடன் மீடியா என்ற நிறுவன மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து வருகிறார் நடிகை ராதிகா.
அவருடைய கணவர் நடிகர் சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வருகிறார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமார் மீண்டும் தலைவராகவும் பொது செயலாளராகவும் இருக்கிறார்.
முதன்மை துணைப் பொதுச்செயலாளராக நடிகை ராதிகா சரத்குமார் பதவியில் இருந்து வருகிறார்.
நேற்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்து களம் இறங்கினார் சரத்குமார்.
இந்த கூட்டணியில் சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையிலும் ராதிகாவும், சரத்குமாரும் தேர்தலில் போட்டியிடவில்லை.
மேலும் 3 தொகுதிகளை திருப்பி கமலிடமே கொடுத்தனர்.
இந்த நிலையில் இவர்கள் மீது போடப்பட்ட பழைய வழக்கு குறித்து தீர்ப்பு இப்போது வந்துள்ளது்
இயக்குநர் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு & கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த ‘இது என்ன மாயம்’ பட தயாரிப்புக்காக ரேடியன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ 1.5 கோடியை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் வாங்கியது.
அதன் பின்னர் கடனை திருப்பி அளிப்பதில் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் காசோலை மோசடி செய்தது .
அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக நடிகர் சரத்குமாரும், நடிகை ராதிகாவும் உள்ளனர்.
இவர்களின் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 7 காசோலைகளும் திரும்பி வந்து விட்டது.
இதனால் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமாருக்கு செக் மோசடி தொடர்பான ஏழு வழக்குகளில் தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடிகை ராதிகாவுக்கு 2 வழக்குகளில் தலா ஒரு வருடமும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் பங்குதாரர்களின் லிஸ்டன் ஸ்டீபனுக்கு 2 வழக்குகளில் தலா 7 ஆண்டு சிறை தண்டனை அளித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.