நடிகர் ஷாரிக் ஹாசன் நடிப்பில் கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘நேற்று இந்த நேரம்’ ஜனவரி 2024 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது!!
நடிகர் ஷாரிக் ஹாசன் நடிப்பில் கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘நேற்று இந்த நேரம்’ ஜனவரி 2024 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது!!சென்னை 21 டிசம்பர் 2023 கிளாப்- இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படம் “நேற்று இந்த நேரம்”.பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர்.
பார்ட்டி கொண்டாட போன இடத்தில் நண்பர்கள் மர்மமான முறையில் காணாமல் போக, அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களை கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது.
கெவின் என் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தொகுப்பு பணிகளை கோவிந்த்.என் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று இந்த நேரம் படத்தின் இசை உரிமத்தை ஜீ மியூசிக் சவுத் வாங்கியுள்ளது.
படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவி ஜி ஆகியோர் பாடியுள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இது ரசிகர்களிடையே சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படம் ஜனவரி 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
டிரைலர் –
https://moviewingz.com/netru-indha-neram-official-movie-trailer-shariq-hassan-haritha-monica-divakar-kumar/
Related posts:
ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்த படம் வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது!!
கல்யாண் ராமின் நடிப்பில் தயாராகி இருக்கும் பீரியாடீக் ஸ்பை திரில்லர் திரைப்படமான ‘டெவில்’ நவம்பர் 24ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.!!
மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் “கடைசி விவசாயி” திரைப்படம் வெளியிட்டு தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தேசிய அளவிலான திரில்லர் படைப்பான ‘ஸ்பை’ எனும் திரைப்படம், ஜூன் மாதம் 29 தேதி வெளியாக உள்ளது.!
விறுவிறுப்பான சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் ‘இரண்டாம் நகர்வு’ இப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிப்பில் ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.!!
விருப்பான திரைக்கதையை கொண்ட திரில்லர் திரைப்படம் SIDDY ( ஷித்தி ) மலையாளம் மற்றும் தமிழில் விரைவில் வெளியாக உள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கு/தமிழில் தயாராகி கொண்டிருக்கும் சார்/ வாத்தி திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!!
நடிகர் விஜய் தேவரகொண்டா- நடிகை சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!!

