நடிகர் சித்தார்த் நடிகை ராஷி கண்ணா நடிக்கும் ‘ரெளடி & கோ”- நகைச்சுவை நிறைந்த கலாட்டா திரைப்படம்!
நடிகர் சித்தார்த் நடிகை ராஷி கண்ணா நடிக்கும் ‘ரெளடி & கோ”- நகைச்சுவை நிறைந்த கலாட்டா திரைப்படம்!சென்னை 16 நவம்பர் 2025 கமர்ஷியலாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்படும் தரமான படங்களைத் தயாரித்து வரும் பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் தற்போது ‘ரெளடி & கோ’ திரைப்படம் உருவாகியுள்ளது. மனம் விட்டு சிரிக்கும்படியான அட்டகாசமான டைட்டில் லுக் இன்று வெளியாகியுள்ளது.
முன்பு சித்தார்த் நடித்த ஆக்ஷன் கதையான ‘டக்கர்’ படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக்- சித்தார்த் ஜோடி இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
உணவு டெலிவரி சர்வீஸ் போல மக்களின் பிரச்சினைகளை கையாளும் கார்பரேட் ரெளடி உலகத்திற்கு ரசிகர்களை ‘ரெளடி & கோ’ அழைத்து செல்ல இருக்கிறது.
படத்தின் டைட்டில் குறித்து இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் பகிர்ந்து கொண்டதாவது, “ரெளடிகளின் கார்ப்பரேட் சாம்ராஜ்யம் பற்றிய கதை என்பதால் ‘ரெளடி & கோ’ என்பதை தலைப்பாக தேர்வு செய்தோம்.
நடிகர்கள் சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்க அவர்களுடன் சுனில், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்ஸி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி மற்றும் சார்லஸ் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர். ‘தனி ஒருவன்’ புகழ் வம்சி வில்லனாக நடித்துள்ளார்.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 15- 20 நாட்களில் போஸ்ட் புரொடக்சன் பணிகளும் நிறைவடைந்து விடும். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பான் இந்திய அளவில் படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக்குழு விவரம்:
ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்,
படத்தொகுப்பு: பிரதீப் E ராகவ்,
கலை இயக்கம்: ஆறுச்சாமி,
இசை: ரேவா,
வடிவமைப்பு: டியூனி ஜான்.
Related posts:
ராஷி கண்ணாவுக்கு டப்பிங் பேசிய டப்பிங் கலைஞர்யிடம் மன்னிப்பு கேட்டார் ராஷி கண்ணா
நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேரும் நடிகை ராஷி கண்ணாவே சொல்லிட்டாங்க.
தளபதி 64′ – விஜய்க்கு ஜோடியாக ராஷி கண்ணா?
இயக்குநர் பா.இரஞ்சித்தின் இணை இயக்குனர் இயக்கும் நகைச்சுவை நிறைந்த வாழ்வியல் திரைப்படம்.
தொடர்ந்து வெற்றிப்படங்களில் இடம்பிடித்து வரும் ராஷி கண்ணா
நடிகர் சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ” படத்திற்காக சித்தார்த் பாடிய “நீ என்ன பாத்தியே” பாடலை கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பாடி வெளியிட்டார்!
சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும்,’8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், நடிகர் சித்தார்த் நடிக்கும் ‘சித்தார்த் 40’!
நடிகர்கள் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவாகி, வரும் அகத்தியா’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகிறது!!
இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் ஆக்ஷன் டிராமா திரைப்படம் ‘சொர்க்கவாசல்’ !
நடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து !

