இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் ஆக்ஷன் டிராமா திரைப்படம் ‘சொர்க்கவாசல்’ !
இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் ஆக்ஷன் டிராமா திரைப்படம் ‘சொர்க்கவாசல்’ !சென்னை 20 அக்டோபர் 2024 ஆர் ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படமாக ‘சொர்க்கவாசல்’ உருவாகி வருகிறது.
ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் தயாரிக்கும் இப்படத்தை பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ திரைப்படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய சித்தார்த் விஸ்வநாத் இயக்குகிறார்.
இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமாகிய நட்டி (நடராஜன் சுப்பிரமணியன்) மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்களான சானியா ஐயப்பன், ஷரஃப் உதீன் மற்றும் ஹக்கீம் ஷா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கருணாஸ், இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன் மற்றும் மெளரிஷ் ஆகியோர் சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
சிறையை பிரதான கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்தப் படம், சிறைச் சுவர்களுக்கு உள்ளே இருப்பவர்களின் கடுமையான வாழ்வியல் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் என்று இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் தெரிவித்தார்.
‘சொர்க்கவாசல்’ படத்திற்காக தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டு கதாபாத்திரமாகவே மாறி, கடின உழைப்பை ஆர் ஜே பாலாஜி வழங்கியுள்ளார்.
இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சிறப்பான பங்களிப்போடு அனைவரும் ரசிக்கக்கூடிய படமாக ‘சொர்க்கவாசல்’ உருவாகியுள்ளது என்று இயக்குநர் மேலும் கூறினார்.
இப்படத்தின் கதையை தமிழ்ப்பிரபா மற்றும் அஷ்வின் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் எழுதியுள்ளார்.
கலை இயக்கம்: எஸ் ஜெயச்சந்திரன், சண்டை பயிற்சி: தினேஷ் சுப்பராயன், உடைகள் வடிவமைப்பு: ஸ்ருதி மஞ்சரி, உடைகள் தலைமை: அனந்தா நாகு, ஒப்பனை: சபரி கிரீசன், ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி மற்றும் எஸ் அழகியக்கூத்தன், ஒலிப்பதிவு: வினய் ஶ்ரீதர், வி எஃப் எக்ஸ்: லார்வென் ஸ்டுடியோஸ், டிஐ: பிக்ஸெல் லைட் ஸ்டூடியோஸ், காஸ்டிங் இயக்குநர்: வர்ஷா வரதராஜன், பப்ளிசிட்டி வடிவமைப்பு: கபிலன் செல்லையா, மக்கள் தொடர்பு: நிகில் முருகன், ப்ரோமோஷன்ஸ்: ஏகேடி, ஆடிட்: ஃபினாங்கி கன்சல்டிங், லீகல்: டி எஸ் லீகல், ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர்: பி எஸ் ராஜேந்திரன், நிர்வாக தயாரிப்பு: விக்ரம் வைபவ் ஆர் எஸ், தயாரிப்பு ஆலோசனை: ஏ கே அனிருத், கிரியேட்டிவ் ஆலோசனை: கிருஷ்ணா மாரிமுத்து.
ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் தயாரிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படம் ‘சொர்க்கவாசல்’.
Related posts:
ஒளிப்பதிவாளர் இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!!
திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் ‘லக்கி மேன்’.!!
சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும்,’8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், நடிகர் சித்தார்த் நடிக்கும் ‘சித்தார்த் 40’!
விஷன் 3 கிளோபல் தயாரிப்பில் சர்வதேச விருதுகளை வென்ற ‘ரேடியோ பெட்டி’ புகழ் இயக்குனர் ஹரி விஸ்வநாத் இயக்கத்தில் அனுராக் காஷயப், ரிதுபர்னா சென்குப்தா நடிப்பில் ‘பன்சூரி
கின்னஸ்’ புகழ் இயக்குனர் பாபு கணேஷ் இயக்கத்தில் ‘பிட்னஸ் ஸ்டார்’ மிஸ்டர் ஏஷியா ரிஷிகாந்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘370’
இயக்குனர் வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கத்தில் ‘அருவி’ மதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது!
ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்
கிஷோர் சினி ஆர்ட் சிவகாசி முருகேசன் தயாரிப்பில், இயக்குனர் சுசி. ஈஸ்வர் இயக்கத்தில், சஞ்சய், மேக்னா நடிப்பில் வித்தியாசமான பரிமாணத்தில் திரைக்கு வரவிருக்கும் ஆக்ஷன் திரைப்படம் ‘தேடு’
இயக்குநர் மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் புகழ் கதாநாயகனாக நடிக்கும் ‘FOUR சிக்னல்’ !!

