தலயுடன் நடித்த புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகூறிய நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னை 01 மே 2021

தலயுடன் நடித்த புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் இன்று தன்னுடைய 50வது பிறந்தநாளை மே 1 ஆம் தேதி கொண்டாடி வருகிறார்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக உள்ள அஜித்குமாரின் 50 வது பிறந்தநாளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அவருடன் நடித்த இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து கூறி இருக்கிறார்.

இதனால் அவருடைய ரசிகர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் பலரும் அஜித்குமாரின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், ஏகன் திரைப்படத்தில் அஜித்குமாருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூறி இருக்கிறார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது

.நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.