ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதிக்கரையில் தன் காதலரை கரம் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன் !

ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதிக்கரையில் தன் காதலரை கரம் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன் !

சென்னை 08 நவம்பர் 2024 நடிகை ரம்யா பாண்டியன் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த ‘ஜோக்கர்’ திரைப்படம் தேசிய விருது பெற்றது.இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானகுக்கு வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். 2020 பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்றி, பெற்று நான்காவதாக வந்தார்.அதை தொடர்ந்து விஜய் டிவி யில் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.கடந்த வாரம் நடிகை ரம்யா பாண்டியன் யோகா ஆசிரியரான லோவல் தவானை திருமணம் செய்யவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கும் காதலர் லோவல தவானுக்கும் ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதிக்கரையில் திருமணம் நவம்பர் 08, 2024 இன்று நடைப்பெற்றது.இந்தத் திருமண நிகழ்ச்சி மிகவும் எளிமையாக நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் சொந்த பந்தங்கள் பலரும் கலந்து கொண்டனர்..இந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி விரைவில் சென்னையில் நவம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.