மலையாள இயக்குனரை மலர்ந்தார் நடிகை ரவீனா ரவி !
மலையாள இயக்குனரை மலர்ந்தார் நடிகை ரவீனா ரவி !
சென்னை 10 மே 2026 ‘வாலாட்டி’ என்ற மலையாளப் திரைப்படத்தின் இயக்குனர் தேவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ரவீனா ரவி.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய பல திரைப்படங்களில் பின்னணி குரல் கலைஞராக நடிகை ஸ்ரீஜா ரவி இருக்கிறார்.
பல திரைப்படங்களில் குழந்தைகளுக்கும் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.
இவர் தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் போர் தொழில் திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர’ திரைப்படத்தில் தனுஷின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் சூப்பர் ஹிட் ஆன ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தில் ஸ்ரீஜா ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரின் பூர்வீகம் கேரளா மாநிலம் என்றாலும் சென்னையில் தங்கி பல திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.
இவரைப் போலவே இவருடைய ஒரே மகள் நடிகை ரவீனா ரவி தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி டப்பிங் கலைஞராக பல நடிகைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
ஒளிப்பதிவாளர் இயக்குனர் நடிகர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் பல தொலைக்காட்சி விளம்பரங்களில் டப்பிங் பேசியிருக்கிறார்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’ திரைப்படத்தில் எமி ஜாக்சனுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.
‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
‘வட்டார வழக்கு’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் இவர் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற “லவ் டுடே” திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் சகோதரி கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
‘மாமன்னன்’ திரைப்படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மே 10ஆம் தேதி ரவீணா ரவி திருமணம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.
‘வாலாட்டி’ என்ற மலையாளப் திரைப்படத்தில் பணி புரிந்த போது அந்த திரைப்படத்தின் இயக்குனர் தேவனுக்கும் பிரவீனாவுக்கும் காதல் மலரவே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணம் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கேரளாவில் திருமணம் நடைபெற்றது.
தன் மகள் ரவீனா ரவி திருமண புகைப்படங்களை பகிர்ந்து மணமக்களை வாழ்த்துங்கள் என்று ஸ்ரீஜா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்..
https://www.instagram.com/p/DYJRcYfDNB6/?igsh=MTJwY2gzY2NiY3N1cw==










