அந்தரன்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- பிரஜின் பத்மநாபன், இவானா வருண், அனுபமா குமார், எம்.கே. சாம்பசிவம், செந்தில் குமாரி, அதிரன், ரமேஷ்பாபு கீதா, பாத்மென், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சந்தோஷ் ராவணன்.

ஒளிப்பதிவாளர் :- கிஷோர் ராமச்சந்திரன்.

படத்தொகுப்பாளர் :- இக்னேஷியஸ் அஸ்வின், சதீஷ் குரோசாவா.

இசையமைப்பாளர் :- ஹரி எஸ்.ஆர்.

தயாரிப்பு நிறுவனம் :-ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ்

தயாரிப்பாளர்கள் :- எம்.கே.  சாம்பசிவம், ஆர்.சுந்தரமூர்த்தி, கே.விஜய குமார், எஸ்.சுதாகர்.

மக்கள் தொடர்பு :- நிகில்  முருகன்

ரேட்டிங் :-  3.5./5.

கதாநாயகி இவானா வருணை  மூன்று பேர் காதலித்து வருகிறார்கள்.

கதாநாயகி இவானா வருணை காதலிக்கும் ஒவ்வொருவரும் மர்மமான முறையில் இருந்து விடுகிறார்கள்.

கதாநாயகி இவானா வருணை சிறு வயதில் பின் தொடர்ந்து காதலிக்கும் அந்த நபரை  கதாநாயகி இவானா வருண் தந்தை மிரட்டியதால் ஊரை விட்டு ஓடி விடுகிறார்.

மற்றொருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்குப் பிறகு பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாக கதாநாயகி இவானா வருண் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது.

நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த  நிலையில் கதாநாயகி இவானா வருணனின் வருங்கால மாப்பிள்ளை  மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார்.

இதனை தொடர்ந்து கதாநாயகி இவானா வருணுக்கு மீண்டும் திருமண ஏற்பாடு நடக்கும், நிலையில் அந்த மாப்பிள்ளையும் விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்.

கதாநாயகி இவானா வருணை காதலிக்கும் நபர்கள் மற்றும்  திருமணத்தில் ஏற்பாடு செய்யும் மாப்பிள்ளைகள் இறந்து கொண்டே இருக்க இந்த தொடர் மரணங்கள் எதேச்சையாக நடப்பவை என்று கதாநாயகி இவானா வருண் குடும்பத்தினர் நினைத்துக் கொண்டிருக்கும் போது, காவல்துறையின் விசாரணையில் இவை அனைத்தும் யாரோ ஒருவர் திட்டமிட்டு இந்த கொலைகளை செய்கிறார்கள் என தெரிய வருகிறது.

இந்த நிலையில், இந்தக் கொலைகளை செய்து கொண்டு இருக்கும் குற்றவாளி குறித்தோ அல்லது மரணங்களின் மர்மம் குறித்தோ எந்தவிதமான தடயங்களும் தகவலும் கிடைக்காமல் போகவே, இந்த இந்தத் தொடர் கொலை வழக்கை காவல்துறை அதிகாரியான கதாநாயகன் பிரஜினிடம் விசாரிப்பதற்காக  ஒப்படைக்கப்படுகிறது.

கதாநாயகி இவானா வருணிடம் இருந்து தன்னுடைய முதல் விசாரணையை தொடங்கும் கதாநாயகன் பிரஜின், நாளடைவில் கதாநாயகி இவானா வருண் மீது காதல் மலர, அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவு செய்கிறார்.

கதாநாயகி இவானா வருணை காதலிக்க நினைப்பவர்கள் மற்றும் திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள் ஏற்பட்ட நிலை கதாநாயகன் பிரஜினுக்கும் ஏற்பட்டதா?,  ஏற்படவில்லையா?,

தொடர் கொலைகளில் இருக்கும் பின்னணியில் உள்ள மர்மத்தையும், மற்றும் கொலையாளியையும் கதாநாயகன் பிரஜின்  கண்டுபிடித்தாரா?, கண்டுபிடிக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘அந்தரன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘அந்தரன்’  திரைப்படத்தில் கதாநாயகனாக பிரஜன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் பிரஜன் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் மிகவும் கம்பீரமான தோற்றமும்  காதலராகவும் தன்னுடைய உணர்வுப்பூர்வமான நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி  தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்.

இந்த ‘அந்தரன்’  திரைப்படத்தில் கதாநாயகியாக  இவானா  வருண், நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் இவானா வருண், பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை தன்னால் முடிந்தவரை எந்தவிதமான குறையில்லாமல் தனது கதாபாத்திரத்தை கவனத்துடன் கையாண்டு மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் தயாரிப்பாளர் எம்.கே.சாம்பசிவம், மற்றும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செந்தி குமாரி,  அனுபமா குமார், அதிரன், ரமேஷ்பாபு கீதா, பத்மன், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் என மற்ற அனைத்து  கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்களது பணியை மிகவும் சிறப்பாக  செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன், ஒளிப்பதிவு மூலம் திரில்லருக்கான சஸ்பென்ஸ் மற்றும் பரபரப்புடன் காட்சிப்படுத்தியிருந்தாலும் , காதல் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை மிக அற்புதமாக காட்சிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஹரி எஸ் ஆர், இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மாபெரும் பலமாக அமைந்துள்ளது.

காதல் காட்சிகள் கிரைம் மற்றும் திரில்லர் சைக்கோ கொலைகள் என  காட்சிகள் மட்டும் இல்லாமல்  உளவியல் சார்ந்த ஒரு விஷயத்தையும் நுட்பமாக திரைப்படத்தை மிக சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் ராவணன்.

மொத்தத்தில், இந்த ‘அந்தரன்’ திரைப்படம் அமர்க்களமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

error: Content is protected !!