கான்சிட்டி’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, அருள் தாஸ், விடிவி கணேஷ், ரமேஷ்திலக், ராதாரவி, அருவி, பொன்வண்ணன், தம்பி ராமையா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஹரிஷ் துரைராஜ்.
ஒளிப்பதிவாளர் :- அரவிந்த் விஸ்வநாதன்.
படத்தொகுப்பாளர் :- அருள் மோசஸ்.
இசையமைப்பாளர் :- ஷான் ரோல்டன்.
தயாரிப்பு நிறுவனம் :- பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்.
மக்கள் தொடர்பு :- யுவராஜ்.
ரேட்டிங் :- 3.5./5.
தமிழ் திரைப்பட உலகில் குற்றப் பின்னணியுடன் நகைச்சுவையை இணைத்து பல்வேறு திரைப்படங்கள் வந்திருந்தாலும், அவற்றில் தனித்துவமான அணுகுமுறையால் ரசிகர்கள் கவனம் ஈர்க்கும் திரைப்படமாக “கான் சிட்டி” அமைந்துள்ளது.
கதாநாயகன் அர்ஜுன் தாஸ், கதாநாயகி அன்னா பென் மற்றும் வடிவுக்கரசி, யோகிபாபு, மாஸ்டர் அகிலன் அனைவரும் குடும்பமாக கர்நாடகா மாநிலத்தில், ஹோட்டல் ஒன்றை நடத்தி கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கதாநாயகன் அர்ஜுன் தாஸ், கதாநாயகி அன்னா பென் மகன் மாஸ்டர் அகிலனை பள்ளியில் இருந்து யாரோ ஒரு அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்று விடுகிறார்.
மாஸ்டர் அகிலனை பள்ளியிலிருந்து கடத்தி சென்றவர் யார்? என்று பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராவின் பார்க்கும்போது கதாநாயகன் அர்ஜுன் தாஸ், கதாநாயகி அன்னா பென் மற்றும் வடிவுக்கரசி, யோகிபாபு,. அவர் யார் என்று அறியும் போது, மாஸ்டர் அகிலனை பள்ளியில் இருந்து எதற்காக கடத்தி சென்றனர்.
மாஸ்டர் அகிலனை பள்ளியில் இருந்து கடத்தியது யார்?, என்று கண்டுபிடித்தார்களா?, கண்டு பிடிக்கவில்லையா?,
கதாநாயகன் அர்ஜுன் தாஸ், கதாநாயகி அன்னா பென் மகன் மாஸ்டர் அகிலனை கடத்தியவரிடம் இருந்து காப்பாற்றினார்களா?, காப்பாற்ற வில்லையா?, என்பதுதான் இந்த ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் தனது வழக்கமான தீவிரமான நடிப்பை கதாபாத்திரங்களைத் தாண்டி, இம்முறை நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக பொருந்தியுள்ளார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உடல்மொழி, வசன உச்சரிப்பு மற்றும் நகைச்சுவை காட்சிகளில் வெளிப்படுத்திய நிலையில். குறிப்பாக குடும்பத்தினருடன் இடம்பெறும் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றது.
இந்த ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் கதாநாயகியாக அன்னா பென் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் அன்னா பென் நடிப்பு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் அன்னா பென் தனது இயல்பான நடிப்பால் கதையில் தனக்கான இடத்தை உறுதியாகப் பிடித்துள்ளார்.
யோகி பாபுவின் நடிப்பு மற்றும் நகைச்சுவையும் உணர்ச்சியும் கலந்த காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு பாராட்டத்தக்கது.
ப
மூத்த நடிகை அமலா வடிவுக்கரசி அவர்களின் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.
அருள்தாஸ் மற்றும் வி டிவி கணேஷ் நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மையை வழங்கியுள்ளார்.
ரமேஷ்திலக், ராதாரவி, அருவி மதன், பொன்வண்ணன், தம்பி ராமையா இவர்கள் அனைவரும் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்து திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன் மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் காட்சிகள் கவனத்தை ஈர்க்கின்றன.
குடும்ப உறவுகள், பண ஆசை, ஏமாற்றுத் திட்டங்கள் மற்றும் எதிர்பாராத சம்பவங்களை நகைச்சுவை கலந்த திரைக்கதையின் மூலம் சுவாரஸ்யமாக இயக்கி உள்ளார் அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ்.
மொத்தத்தில், இந்த ‘கான் சிட்டி’ சிரிப்பும் சிந்தனையும் கலந்த கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்.



