லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் விஜய் டிவி புகழ், கதையின் நாயகனாக நடிக்கும் நடிக்கும் 4 இடியட்ஸ்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் விஜய் டிவி புகழ், கதையின் நாயகனாக நடிக்கும் நடிக்கும் 4 இடியட்ஸ்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
சென்னை 14 பிப்ரவரி 2026 தமிழ் திரைப்பட உலகில் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ், பல வெற்றி திரைப்படங்களை தயாரித்த நிலையில், அதன் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் மறைவுக்குப் பின்னர் அந்த நிறுவனம் திரைப்பட தயாரிப்பை நிறுத்திவிட்டனர்.
இந்த நிலையில், தற்போது லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனர்களின் வாரிசுகள் தற்போது அதே நிறுவனத்தின் பெயரில் திரைப்படங்கள் தயாரிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பல்வேறு வெற்றி திரைப்படங்களை தயாரித்த கே முரளிதரன் தொடங்கிய லட்சுமி மூவி மேக்கர்ஸ் திரைப்பட நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தற்போது திரைப்படங்கள் தயாரிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தங்களது நிறுவனத்தின் 26வது திரைப்படமாக அறிமுக இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான புகழ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
அதன்படி, லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில், டாக்டர்.எம்.ஸ்ரீவத்சன், எம்.கோகுல் கிருஷ்ணன் இணைந்து ‘4 இடியட்ஸ்’ திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரவி மரியா நடித்திருக்கிறார்.
கதையின் நாயகியாக பிரக்யா நயன் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் வின்செண்ட் அசோகன், கும்கி அஷ்வின், இந்திரன், திடியன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சுபாஷ் முனிரத்னம் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் பாடல்களை கலைகுமார், திவ்யபரத் ரவி எழுதியிருக்கிறார்.
இந்த ‘4 இடியட்ஸ்’ திரைப்படத்திற்கு யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, எம்.டி.பிரபாகரன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
எஸ்.என்.பாசில் படத்தொகுப்பு செய்கிறார்.
இயக்குனர் டாவின்ஸி சரவணன் வசனம் எழுதியிருக்கிறார்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த ‘4 இடியட்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில், சென்னை கமலா திரையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
மேலும், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் மீண்டும் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த நிறுவனம் இன்னும் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தயாரிக்கும், என்றும் தெரிவித்தனர்.











