BB4 அகாண்டா 2: தாண்டவம் படத்தில் ஆதி பினிசெட்டி நடிக்கிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது.
#BB4 அகாண்டா 2: தாண்டவம் படத்தில் ஆதி பினிசெட்டி நடிக்கிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது.சென்னை 10 பிப்ரவரி 2025 மாஸ் கடவுளாக கொண்டாடப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனுவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார், இவர்கள் கூட்டணியில் அகாண்டா 2: தாண்டவம் பிரம்மாண்டமாக உருவாகிறது.
திறமைமிகு முன்னணி இளம் நடிகரான ஆதி பினிசெட்டி இப்படத்தில் ஒரு சக்திவாய்ந்த மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அனைத்து கதாபாத்திரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் புகழ் பெற்ற போயபதி, ஆதியின் கதாபாத்திரத்தை நம்பமுடியாத அளவு வெறித்தனத்துடன் வடிவமைத்துள்ளார்,
தற்போது, அன்னபூர்ணா ஸ்டூடியோவில் 7 ஏக்கரில் கலை இயக்குநர் ஏ.எஸ்.பிரகாஷ் மற்றும் அவரது குழுவினரால் அமைக்கப்பட்ட பிரமாண்டமான, பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட செட்டில் படத்தின் ஆக்சன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பாலகிருஷ்ணாவின் கதாபாத்திரமும் மிகவும் சுறுசுறுப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டாம் பாகத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார்,
அகண்டா 2 பான் இந்தியா வெளியீடாக வெளியாகவுள்ளது, இது பாலகிருஷ்ணா மற்றும் இயக்குநர் போயபதி ஸ்ரீனு ஆகிய இருவருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும். தசரா பண்டிகையையொட்டி, செப்டம்பர் 25, 2025 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
நடிகர்கள்: மாஸ் கடவுள் நந்தமுரி பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி பினிசெட்டி
எழுத்தாளர், இயக்குநர்: போயபதி ஸ்ரீனு
தயாரிப்பாளர்கள்: ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா
பேனர்: 14 ரீல்ஸ் பிளஸ்
வழங்குபவர்: எம் தேஜஸ்வினி நந்தமுரி
இசை: தமன் எஸ்
ஒளிப்பதிவு : சி ராம்பிரசாத், சந்தோஷ் டி டெடகே
கலை: ஏ.எஸ்.பிரகாஷ்
எடிட்டர்: தம்மிராஜு
சண்டைகள்: ராம்-லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்











