பீப்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரபலங்கள் செப்டம்பரில் திரைப்படத்தை ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது !
பீப்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரபலங்கள் செப்டம்பரில் திரைப்படத்தை ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது !
சென்னை 01 ஆகஸ்ட் 2026 எம் குவெஸ்ட் மூவிஸ் (mQuest movies) நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பீப்’ (Beep) இல.சண்முகசுந்தர் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.
‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரகுதில் நடிக்க, பஞ்சாப்பை சேர்ந்த பிரேர்ணா கண்ணா, யாமினி, சார்பட்டா பரம்பரை பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா ஆகியோர் இதில் நடித்துள்ளனர்
தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரசாந்த் விஹாரி இசையமைக்கிறார். இவர் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘கேர்ள் பிரண்ட்’ படத்திற்கு இசையமைத்தவர். கன்னட திரை உலகை சேர்ந்த, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிரதீப் பத்மகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் மலையாள திரை உலகைச் சேர்ந்த அபிஷேக் மற்றும் டான்பாஸ்கோவின் உதவியாளர் விக்னேஷ் ஆகியோர் படத்தொகுப்பை கவனித்துள்ளனர். மிஸ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ட்ரெயின் படத்தில் பணியாற்றிய ராம்குமார் இப்படத்தின் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
‘பீப்’ படம் குறித்து இயக்குநர் இல.சண்முகசுந்தர் கூறும்போது,
“எம்பிஏ படித்துவிட்டு ஐடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு நல்ல சினிமா தர வேண்டும் என்பது ஆசை. அங்கிருந்து வெளியே வந்ததும் ‘கட்டு’ (Bind) என்கிற குறும்படத்தை இயக்கினேன்.. 1981ல் இலங்கையில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த குறும்படம் தேசிய விருது போட்டியில் கலந்து கொள்ள நாமினேட் செய்யப்பட்டது
சினிமாவில் நான் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம் தான் ‘பீப்’ இது ஹை கான்செப்டில் (Hight Concept) பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்து உருவாகியுள்ள ஒரு க்ரைம் டிராமா. எல்லா படங்களிலும் துப்பாக்கியையும் கத்தியையும் தான் பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை சில நேரங்களில் புத்தி தான் மிக சிறந்த ஆயுதம் அதுதான் இந்த படத்தின் ஸ்பெஷல். இந்த ஜானரில் வருடத்திற்கு நான்கு படங்கள் மட்டுமே வெளியாகின்ற நிலையில் ரசிகர்களுக்கு அதை எளிதாக புரியும் வகையில் உருவாகி இருக்கும் படம் தான் ‘பீப்’.
ஒரு புகைப்படம் என்பதே பல விஷயங்கள் அடங்கிய ஒரு புதையல் போலத்தான். இப்படத்தின் நாயகன் ஒரு புகைப்படத்தின் மூலமாக ஒரு காதலியின் மன ஓட்டத்தை மட்டுமல்ல ஒரு குற்ற வழக்கின் பின்னணியை கூட நுட்பமாக கணித்து அந்த வழக்கிற்கு தீர்வு சொல்லக்கூடிய அளவுக்கு திறமை வாய்ந்தவன். இதை ஜோதிட திறமையாகவோ அல்லது ஆராய்ந்து பார்க்கும் மூளைத்திறன் என்றோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு பின்னணியில் ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. இதுதான் இந்த படத்தின் யுஎஸ்.பி.
ஆறு பேர் கொண்ட நண்பர்கள் குழு. அதில் ஒருவர் இறந்துவிட மற்ற நண்பர்கள் இறப்பின் மர்மத்தை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் கதை.. ஹீரோவுக்கு மட்டும் முக்கியத்துவம் என்று இல்லாமல் ஹீரோயின் மற்றும் நண்பர்களாக நடிப்பவர்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
வழக்கமான படங்களையே பார்த்து சலிப்படைந்த ரசிகர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை புதுமையான திரைக்கதையுடன் அணுகி திரில்லிங்காக கொடுத்திருக்கிறோம் நல்ல க்ரைம் திரில்லர் படங்களை விரும்புகின்ற, தான் இருக்கிற இடத்தில் இருந்து இன்னும் அதிக உயரத்திற்கு சொல்வதை லட்சியமாக வைத்திருக்கின்ற ரசிகர்களுக்கு ‘பீப்’ முழு திருப்தியை தரும்” என்று கூறியுள்ளார்.
பீப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது சென்சார் சான்றிதழ் பெறுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் விதமாக இதன் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் நட்டி நட்ராஜ், தீபக் தினகர், சுகாசினி, கோமல் சர்மா ஆகியோர் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூலை-29 அன்று வெளியிட்டுள்ளனர்










