இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட “பூங்கா நகரம்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட “பூங்கா நகரம்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சென்னை 18 செப்டம்பர் 2023 இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றிய ஈ.கே.முருகன் இயக்குனராக அறிமுகமாகும் படம் பூங்கா நகரம்.

திருவண்ணாமலையை கதைக் களமாக கொண்டு சஸ்பென்ஸ் கலந்த காமெடி கலந்த ஹாரர் த்ரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தை அக்க்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் நடராஜ் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் கதாநாயகனாக தமன் குமார், கதாநாயகியாக ஸ்வேதா டோரத்தி , பிளாக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு பாண்டியன் குப்பன் சி.எம் இளங்கோவன் எடிட்டிங், பாடல்கள் நா.ராசா, இசை ஹமரா C.V. நடனம் ராபர்ட் மாஸ்டர், திருவண்ணாமலையை கதைக் களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்றத்தை இயக்குனர் கேஎஸ்.ரவிக்குமார் இன்று வெளியிட்டார்.