1500-க்கும் மேற்பட்ட அதிகமான திரையரங்குகளில் சக்ரா தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.

சென்னை 19 பிப்ரவரி 2021

நடிகர் விஷால் நடிப்பில் புதுமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த் இயக்கியிருக்கும் ‘சக்ரா’ திரைப்படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார்.

இந்த சக்ரா திரைப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ரெஜினா நடிக்க ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நடிகர் விஷால் நடிப்பில் ‘சக்ரா’ திரைப்படம் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது.

பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சக்ரா திரைபபடம், இன்று ( 2021 பிப்ரவரி .19) உலகம் முழுவதும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

error: Content is protected !!