முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கப் போகும் குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷி !

முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கப் போகும் குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷி !

சென்னை 25 செப்டம்பர் 2024 கால் கொலுசு திரைப்படத்தை நடித்து தயாரித்து இயக்கிய Dr.S V. ரிஷி சமீபத்தில் மறைந்த தனது தந்தையின் நினைவாக “எங்கள் அப்பா” என்ற மியூசிக் ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார்.

இதில் தனது மகள் குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியை பாடலுக்கு ஏற்ப வாயசைக்க வைத்து, நடனம் ஆட வைத்து நடிக்க வைத்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இந்த விழாவில் டைரக்டர் K.பாக்யராஜ், டைரக்டர் பேரரசு போன்ற திரையுலகில் உள்ள பிரபலங்கள் கலந்துக்கொண்டு குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியின் நடிப்பைப் பார்த்து ‘எதிர்காலத்தில் பிரபலமான குழந்தை நட்சத்திரமாகவும் பெரியநாயகியாகவும் வருவாய்’ என்று பாராட்டியும் வாழ்த்தியும் பேசியிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரபல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைக்க தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு பேசியிருக்கிறார்கள்.

இதில் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களும் அடங்கும்
Dr.S.V. ரிஷியும் தான் சொந்தமாக தயாரித்து நடித்து இயக்கப்போகும் திரைப்படத்திலும்
லக்‌ஷனா ரிஷியை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்து அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

ஏவிஎம் மின் முதல் இடம் திரைப்படத்தை இயக்கிய R. குமரன் உருவாக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்கள்.

இந்தக் குழந்தை நட்சத்திரம் முன்று வயதிலேயே திருக்குறளை | சிலப்பதி காரத்தை மனப்பாடமாக சொல்லக்கூடிய ஆற்றல் கொண்டவராக இருக்கிறார்.

பல யூடியூப்களில் ‘ருசியாக சமைப்பது எப்படி’ என்று நேரடியாக சமைத்துக் காட்டியிருக்கிறார்.

இது பல யூடியூப்களில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

திரைப்படங்களைப் பார்த்தால் அவர்கள் நடித்திருப்பதை போல் அப்படியே நடித்தும். நடனமாடியும் காட்டுகிறார்.

இவருக்குப் பிடித்த ஹீரோக்கள் விஜய் , தனுஷ் .,விஜய் சேதுபதி
இப்போது இவர் திருச்சியை அடுத்துள்ள பெரம்பலூரில் இருக்கும் கோல்டன் கேட்ஸ் வித்யாஸ்ரமத்தில் முதல் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தத்தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி பின்னாளில் பிரபலமான கலைஞர்களாக உயர்ந்த கமலஹாசன் / ஸ்ரீ தேவி. குட்டி பத்மினி , பேபி ஷாலினி போன்று தனது மகள் லக்‌ஷனா ரிஷியையும் பிரபலமான குழந்தைநட்சத்திரமாக உருவாக்க வேண்டும் அதுதான் எங்கள் லட்சியம் என்கிறார்கள் குழந்தை நட்சத்திரத்தின் பெற்றோர் Dr.S.V. ரிஷி. அனீஷா சதீஷ்.