நடிகர் ரிஷி கபூர் மரணம்: இதயம் நொறுங்கியது சூப்பர் ஸ்டார் – நம்ப முடியல – உலக நாயகன்.

நடிகர் ரன்பிர் கபூரின் தந்தையும் பிரபல இந்தி நடிகருமான ரிஷி கபூர் இன்று காலை மரணமடைந்தார்.

ரிஷி கபூருக்கு வயது 67. இவரது மறைவு இந்தியத் திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

நடிகர் ரிஷி கபூரின் மறைவு குறித்து ரஜினி மற்றும் கமல் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இதயம் நொறுங்கியது.. ஆன்மா சாந்தியடையட்டும்.. என் அன்பு நண்பர் ரிஷி கபூர் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளர்.

நம்ப முடியவில்லை சின்டூஜி (திரு ரிஷிகபூர்) எப்போதும் தயாராக ஒரு புன்னகையை வைத்திருப்பார். எங்கள் இருவருக்கும் பரஸ்பரம் அன்பும், மரியாதையும் இருந்தது. நீங்கள் இல்லாத குறையை உணர்வேன் நண்பா. அவர் குடும்பத்துக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!