இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கத்தில், நடிகர் அருள்நிதி- நடிகை மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‘மை டியர் சிஸ்டர்’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது!
இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கத்தில், நடிகர் அருள்நிதி- நடிகை மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‘மை டியர் சிஸ்டர்’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது!சென்னை 16 நவம்பர் 2025 வெவ்வேறு ஜானர்களில் பார்வையாளர்களுக்கு நெருக்கமான தரமான கதைகளை தொடர்ந்து தயாரித்து வருகிறது பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம். குடும்ப பார்வையாளர்களுக்குப் பிடித்த வகையில் விறுவிறுப்பான, எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த மற்றும் உணர்வுப்பூர்வமாக தொடர்புபடுத்திக் கொள்ளும் பல கதைகளையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.‘பாசமலர்’ படத்தில் ஆரம்பித்து 1990-களில் வெளியான ‘கிழக்கு சீமையிலே’, பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘வேதாளம்’ எனப் பல படங்கள் அண்ணன்- தங்கை பாசத்தை பல தலைமுறைகளாக பேசி வருகிறது.
அந்த வகையில், ‘மை டியர் சிஸ்டர்’ என்ற உணர்வுப்பூர்வமான கதையை வழங்குகிறது பேஷன் ஸ்டுடியோஸ். கோல்ட்மைன்ஸ் டெலிஃபிலிம்ஸ், மனிஷ் ஷாவுடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற தன் அறிமுக படத்திலேயே விமர்சன ரீதியாக பாராட்டுகள் பெற்ற பிரபு ஜெயராம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
கதை சார்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி மற்றும் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் மம்தா மோகன்தாஸ் இருவரும் அண்ணன்- தங்கை கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளனர்.
‘பைசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘மை டியர் சிஸ்டர்’ படத்தில் இசை ரசிகர்களுக்குப் பிடித்த ஏழு பாடல்களை இயற்றி இருக்கிறார் நிவாஸ் பிரசன்னா.
உணர்வுப்பூர்வமான மற்றும் மகிழ்ச்சி நிறைந்த பல தருணங்களைக் கொண்ட ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் கண்ணை கவரும் புரோமோ அறிவிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
படம் குறித்து இயக்குநர் பிரபு ஜெயராம் பகிர்ந்து கொண்டதாவது,
ஆணாதிக்கவாதியான பச்சை கிருஷ்ணனுக்கும் பெண்ணியவாதியான அவனது அக்கா நிர்மலா தேவிக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள்தான் இந்தக் கதை. இந்த விஷூவல் புரோமோ உருவாவதற்கு பின்னால் செட்டில் அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸின் ஜாலியான பல தருணங்களை கொண்டே உருவாக்கினோம். திரையிலும் இவர்களது காம்பினேஷன் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்” என்றார்.
பேஷன் ஸ்டுடியோஸ், தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “அர்த்தமுள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களுடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி.
இந்தக் கதை எண்டர்டெயின் செய்வதோடு பல உணர்வுப்பூர்வமான தருணங்களையும் கொண்டுள்ளது என்பதை உறுதியளிக்கிறேன்” என்றார்.
படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடையும் தருணத்தில் உள்ளது. சமூகத்திலும் குடும்பத்திலும் ஆண், பெண் இருவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
நடிகர்கள்:
அருள்நிதி, மம்தா மோகன்தாஸ், அருண்பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் பலர்.
தொழில்நுட்பக்குழு விவரம்:
எழுத்து, இயக்கம் – பிரபு ஜெயராம்,
தயாரிப்பு – சுதன் சுந்தரம், மனிஷ் ஷா,
தயாரிப்பு நிறுவனம் – பேஷன் ஸ்டுடியோஸ் & கோல்ட்மைன்ஸ்,
நிர்வாக தயாரிப்பாளர் – ஏ. குமார்,
ஒளிப்பதிவு – வெற்றிவேல் மகேந்திரன்,
எடிட்டர் – வெங்கட் ராஜன்,
கலை இயக்குநர் – கே. ஆறுசாமி,
இசை – நிவாஸ் கே. பிரசன்னா,
இணை இயக்குநர் – கபில் தேவ். எம் & ஆஷிஷ். பி,
பாடலாசிரியர் – உமா தேவி, மோகன் ராஜன், விக்னேஷ் ஸ்ரீகாந்த், ஜெகன் கவிராஜ், பிரபு ஜெயராம்,
ஸ்டண்ட் – கணேஷ்,
நடன இயக்குநர் – ஷங்கர் ஆர்,
ஸ்டில்ஸ் – ஆகாஷ் பாலாஜி,
ஆடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்,
டிஐ கலரிஸ்ட் – ஜான் ஸ்ரீராம்,
விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் – ஃபாசில்,
டிஐ & விஎஃப்எக்ஸ் ஸ்டுடியோ – பிக்சல் லைட்ஸ்,
ஒலி வடிவமைப்பு – ஜெய்சன் ஜோஸ், டேனியல் ஜெபர்சன்,
டப்பிங் இன்ஜினியர் – என் வெங்கட பாரி
டியுபி, எஸ்எஃப்எக்ஸ் & மிக்ஸ் – ஃபோர் ஃபிரேம்ஸ்,
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்,
விளம்பர வடிவமைப்பு – கண்ணதாசன் டி.கே.டி
Related posts:
நடிகர் அருள்நிதி நடகை துஷாரா விஜயன் நடித்துள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டீசர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமோக வரவேற்பு பெற்று வருகிறது!!
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும், இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ‘திருவின் குரல்’ (Voice of Thiru)!
நடிகர் ஜெயம் ரவியின் நடிக்கும் ‘பூமி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
RAGE OF KAANTHA’ தமிழ்-தெலுங்கு ராப் பாடல் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இணையத்தில் டிரெண்டாகியுள்ளது!
நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘மோகன்தாஸ் ‘ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு.
Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரிப்பில், பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “ என்னங்க சார் உங்க சட்டம்” !
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும், ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ் “பேப்பர் ராக்கெட்” .
அறிமுக இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் தேஜாவு திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது !!
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாகவுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்பட டிரெய்லர் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புப் பெற்று வருகிறது!

