சென்னை தீவுத்திடல் அருகே குடிசைவாழ் சேரி மக்களை வெளியேற்ற கூடாது என இயக்குனர் பா.இரஞ்சித் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
கூவம் ஆற்றில் இறங்கி 13 பேர் உயிர் விடுவோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இயக்குனர் பா.இரஞ்சித் நேரில் வந்து ஆறுதல் கூறியும் கோரிக்கை விடுத்ததையடுத்து 13 பேரும் போராட்டத்தை கைவிட்டனர்.
உங்களை மட்டுமே நம்பிகிறோம் எங்களை காப்பாற்றுங்கள் என்று போராட்டத்தில் மக்கள் கண்ணிர் மல்க கூறினார்கள்.
தமிழக அரசுக்கு சென்னையில் சேரி வாழ் மக்களை அகற்றுவதே வேலையாக உள்ளது.தொற்று காலத்திலும் அரசு அவர்களை வஞ்சிக்கிறது.
தலைமைச் செயலகம் அருகிலிருந்தும் மாவட்ட ஆட்சியாளர், அரசியல் கட்சிகள் யாரும் வராதது பெரும் வருத்தத்தை அளிக்கிறது.
ஆளும்கட்சியினர் சென்னை சுத்தப்படுத்தும் திட்டத்தை மட்டும் தான் சரியாக செய்து வருகின்றனர்.
தலித் மக்களுக்கு ஓட்டு மட்டுமே ஆயுதம் வருகிற தேர்தலில் தலித் மக்களுக்கு யார் துணையாக இருக்கிறார்களோ,
அவர்களுக்கு எங்களுடைய ஆதரவு என்று ஒட்டுமொத்த மக்களும் கோரிக்கை விடுப்போம்.
ஓட்டிற்கு மட்டும் வருகிற அரசியல் கட்சிகள் எங்கள் பாதிப்புக்கு ஏன் வருவதில்லை மக்களின் அழுகைக்கு உங்களின் பதில் என்ன???
374 குடும்பங்கள் இங்கே வாழுகிறது எந்த ஒரு முன்னெச்சரிக்கை ஏற்பாடும் செய்யாமல் திடீரென்று வந்து வீட்டினை இடிப்பது பெறும் துரோகம்.
சட்டரீதியாக ஆக்கிரமிப்பை அகற்றினால் அப்பகுதியிலிருந்து 8 கி.மீ தொலைவுக்குள் இடம் தர வேண்டும் அரசு செய்து கொடுக்குமா??
இயக்குனர் பா.இரஞ்சித் கேள்வி!!












