தமிழர்களுக்கு இயக்குனர் பேரரசு கேள்வி!

சென்னை 07 ஜனவரி 2023 தமிழர்களுக்கு இயக்குனர் பேரரசு கேள்வி!

தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றபோது வருகின்ற கோபம், தமிழ்நாட்டை திராவிட நாடு என்றபோது, தமிழனை திராவிடன் என்றபோது, நம் தமிழக முதல்வர் தமிழ்நாடு மாடல் அல்லது தமிழ் மாடல் என்று சொல்லாமல் திராவிட மாடல் என்று சொன்ன போது ஏன் தமிழா இந்த கோபம் வரவில்லை? திராவிட நாட்டை மொழிவாரியாக பிரித்து தெலுங்கர்களுக்கு ஆந்திரவாகவும்,
மலையாளிகளுக்கு கேரளாவாகவும்,
கன்னடர்களுக்கு கர்நாடகாவும், தமிழர்களுக்கு தமிழ் நாடாகவும் பிரித்துவிட்ட பின்பு இன்னும் நாம் மட்டும் திராவிடர்களாக அழைக்கப்படுவது ஏன்?