இங்கு பலபேர் தமிழ்ப்பற்று இருப்பது போல் நடித்து கொண்டிருக்கிறார்கள் இயக்குனர் பேரரசு.!

சென்னை 16 ஏப்ரல் 2022 இங்கு பலபேர் தமிழ்ப்பற்று இருப்பது போல் நடித்து கொண்டிருக்கிறார்கள் இயக்குனர் பேரரசு.!

நல்லவனாக வாழ்வது வேறு நல்லவனாக நடிப்பது வேறு அதே போல்தான் தமிழ்ப் பற்றோடு இருப்பது வேறு தமிழ்ப்பற்று இருப்பது போல் நடிப்பது வேறு இங்கு பலபேர் தமிழ்ப்பற்று இருப்பதுபோல் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்

தமிழை அழியாமல் காக்க வேண்டுமென்றால் முதலில் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள பல பள்ளிக்கூடங்களில் தமிழ்ப் பாடமே இல்லை என்பது இன்றைய அவல நிலை!

பசுமரத்து ஆணி என்று சொல்வார்கள்.

அது ஆரம்பப் பள்ளி காலமே! இன்று பல ஆரம்பப் பள்ளிகளில் தமிழ்ப் பாடம் இல்லை என்கிற போது.

பின் தமிழ் எப்படி, எந்த வயதில் பதியும்? படிப்பறிவு இல்லாத காலத்தில் எழுதப் படிக்க தெரியாதவர்கள் கோடிப்பேர் இருந்தனர்.

இன்றய நிலையும் அப்படித்தான் தமிழில் எழுதப் படிக்கத் தெரியாத கோடிக் கணக்கான  மாணவர்கள் இருக்கிறார்கள் எனும் அபாயத்தை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

விரும்பினால் இந்தியை படி! விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தமிழன் தமிழை படிக்க வேண்டும்!

முதலில் அழியாது தமிழைக் காப்போம்!