டங்கி ஹிந்தி திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.5/5.

நடிகர் & நடிகைகள் :- ஷாருக்கான், டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், பொம்மன் இரானி, விக்ரம் கொச்சார், சதிஷ் ஷா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ராஜ்குமார் ஹிரானி.

ஒளிப்பதிவாளர்கள் :-  சி.கே. முரளீதரன்‌ அமித் ராய் & குமார் பங்கஜ்.

படத்தொகுப்பாளர் :– ராஜ்குமார் ஹிரானி.

இசையமைப்பாளர் :- அமன் பந்த்.

தயாரிப்பு நிறுவனம் :- ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் & ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- கௌரி கான், ராஜ்குமார் ஹிரானி, ஜோதி தேஷ்பாண்டே .

ரேட்டிங் :- 3.5/ 5.

இந்த 2023ஆம் ஆண்டு முன்னதாக வெளியான பதான் , ஜவான் வெற்றி திரைப்படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டின் ஹாட்ரிக் வெற்றியை நடிகர் ஷாருக்கான் டங்கி பதிவு செய்யும் என்பது நிச்சயம்.

நமது இந்தியா என்னும் திருநாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு சட்டவிரோதமான முறையில் செல்லும் முறையைத்தான் டங்கி என கூறுகிறோம்.

இரண்டாம் உலகப் போரின் கடைசியில் இங்கிலாந்து நாட்டில் மனித வளத்திற்கான தட்டுப்பாட்டில் இருந்தபோது மற்ற நாடுகளில் இருந்து குடி புகுந்த மக்கள்களை தங்களது உற்பத்தி தேவைகளுக்கு பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

இந்தியா திருநாட்டில் குறிப்பாக பஞ்சாப்  மாநிலத்தில் உள்ள பல்வேறு இளைஞர்கள் இங்கிலாந்து சென்று செட்டிலாக வேண்டும் என அதே கனவில் சுற்றித் திரிகிறார்கள்.

பஞ்சாபில் அருகில் உள்ள லால்து என்கிற கிராமத்தைச் சேர்ந்த கதாநாயகி டாப்ஸி பண்ணு  பொம்மன் இரானி, மற்றும் விக்கி கெளஷல்  ஆகிய  நபர்கள் எப்படியாவது லண்டனுக்கு சென்று செட்டில் ஆகிவிட வேண்டும்  என  இவர்களின் லட்சியமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அனைவருடைய வீட்டிலும் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக விசா எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விசா ஏற்பாடு செய்து தருவதாக கூறி தப்பான ஏஜென்சியிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த இந்த   நபர்களின் வாழ்க்கையில் ஒரு பழைய கடனை தீர்க்க வந்து சேர்கிறார் கதாநாயகன் ஷாருக் கான்.

முன்னாள் ராணுவ வீரராக இருந்த கதாநாயகன் ஷாருக்கான் கதாநாயகி டாப்ஸி பண்ணுவின் மீது காதல் மலர்கிறது.

கதாநாயகி டாப்ஸி பண்ணுவின் மீது கதாநாயகன் ஷாருக்கானுக்கு
காதல் இருப்பதால் இவர்கள் லண்டன் செல்லும் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்கிறார்.

பல்வேறு சவால்களுக்குப் பின் டங்கியாக சட்டவிரோதமாக லண்டனுக்கு செல்ல முடிவுசெய்கிறார்கள்.

இந்த ஷாருக்கான், டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், பொம்மன் இரானி, நான்கு பேரும் சட்ட விரோதமாக லண்டனுக்கு சென்றார்களா? இல்லை செல்லவில்லையா?  அந்த நான்கு பேரின் லட்சியம் நிறைவேறியதா? நிறைவேறவில்லையா? என்பதுதான் டங்கி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த டங்கி திரைப்படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்திருக்கிறார்.

<span;>கதாநாயகன் ஷாருக்கான் இரண்டு விதமான தோற்றத்தில் இளம் வயது தோற்றம் <span;> ஒன்று மற்றும் வயது முதிர்ந்த தோற்றம் என்று இரண்டு தோற்றங்களில் வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.

இரண்டு தோற்றங்களில்  வித்தியாசத்தை காண்பிப்பதற்காக  உடல் அளவில் எந்த ஒரு  முயற்சியும் செய்யாமல், மீசை மற்றும் தாடி இல்லாமல் இளைஞராகவும்  நரைத்த முடியும் மற்றும் நரைத்த தாடியுடன் வயதான கதாபாத்திரங்களில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

காதல் காட்சிகளிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் பட்டையை கிளப்பியிருக்கும் கதாநாயகன் ஷாருக்கான், நகைச்சுவை காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.

இந்த டங்கி திரைப்படத்தில் கதாநாயகியாக டாப்ஸி பண்ணு நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கிறார் டாப்ஸி பண்ணு கதையின் தொடக்கமும் முடிவும் அவரைச் சுற்றியே அமைந்துள்ளது.

கதாநாயகன் ஷாருக்கான் மற்றும் கதாநாயகி டாப்ஸி பண்ணு இருவரும் போட்டி போட்டு கொண்டு நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகி டாப்ஸி பண்ணு மெல்லிய புன்சிரிப்பு பல காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்

பொம்மன் இரானி, விக்ரம் கொச்சார், சதிஷ் ஷா, இவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சற்று நேரம் மட்டுமே வரும் விக்கி கெளஷலின் கதாபாத்திரம்  ஒட்டுமொத்த திரைப்படத்தையும் தாங்கிச் செல்வதற்கான காரணமாக அமையும் அளவிற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர்கள் சி.கே. முரளீதரன்‌ அமித் ராய் & குமார் பங்கஜ் ஒலிப்பதிவை மிகவும் அருமையாக கொடுத்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ப்ரீதமின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

இசையமைப்பாளர் அமன்  பந்தின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்.

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் பி கே படம் ஒரே நேரத்தில் நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் அது பேசிய அரசியலும் பார்வையாளர்களை கவர்ந்திருந்தது.

நகைச்சுவைக் காட்சிகள் முழுவதும் பார்வையாளர்களை உற்சாகமாக வைத்திருக்கும் டங்கி திரைப்படம் இரண்டாம் பாதியில் ஒரு சீரியஸான திருப்பத்தை எடுக்கிறது.

மொத்தத்தில், இந்த ‘டங்கி’ திரைப்படம் மூலம் நடிகர் ஷாருக்கானின் வெற்றி பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது .

error: Content is protected !!