ஆயிரம் பொற்காசுகள் ரேட்டிங் :- 3.75 /5.

நடிகர் & நடிகைகள்:- விதார்த், சரவணன், அருந்ததி நாயர், ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், வெர்டிவல் ராஜா, பவன் ராஜ், ஜிந்தா, கர்ண ராஜா, ஜிந்தா கோபி, செம்மலர் அன்னம், ரிந்து ரவி, தமிழ் செல்வி, ஜானவிகா, சுப்பிரமணியன் மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ரவி முருகையா.

ஒளிப்பதிவாளர் :- பானு முருகன்.

படத்தொகுப்பாளர்கள் :- ராம் & சதீஷ்.

இசையமைப்பாளர் :- ஜோஹன் சிவனேஷ்.

தயாரிப்பு நிறுவனம் :- ஜி.ஆர்.எம். ஸ்டுடியோஸ்- கேஆர் இன்ஃபோடெய்ன்மென்ட். –

தயாரிப்பாளர்கள் :-  ஜி. ராமலிங்கம் –  ஜி. ஆர். வெங்கடேஷ் – ஜி. ஆர். ராஜேஷ்.

ரேட்டிங் :- 3.75 /5.

பெரிய பெரிய நடிகர்களை வைத்து அதிக பொருட் செலவில் மிக பிரம்மாண்டமாக  தேவையற்ற சண்டைக்காட்சிகள் இல்லாமல் திரைப்படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதிக் காட்சி வரை நகைச்சுவையை தவிர வேறு ஒன்றுமில்லை என்று சொல்லும் அளவுக்கு திரைப்படம் படு நகைச்சுவையாக ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம் அமைந்துள்ளது.

தஞ்சாவூர் அருகில் உள்ள குருவாடிப் பட்டி என்ற கிராமத்தில் மிகவும் சோம்பேறியான ‘பருத்திவீரன்’ சரவணன் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் அக்கம் பக்கம் உள்ள வீடுகளில்  வளர்க்கும் கோழிகளை திருடி சமைத்து சாப்பிட்டு தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தாய்மாமன் ‘பருத்திவீரன்’ சரவணன் தன் தங்கையின் மகன் கதாநாயகன் விதார்த் டிகிரி முடித்து விட்டு எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் வீட்டில் வெட்டியாக, இருப்பதாக கூறி கொஞ்ச நாள் தன் அண்ணன்’பருத்திவீரன்’ சரவணனிடம் இருக்கட்டும் என அவருடைய தங்கை விட்டு செல்கிறார்..

தாய்மாமன் சரவணனும், தன் மச்சான் விதார்த் இருவரும் தினந்தோறும் சாப்பிடுவதும் தூங்குவதுமாக  ஒரு வேலையாக வைத்து கொண்டிருக்க, அந்த கிராமத்தில் சிறிய பெட்டிக்கடை வைத்திருக்கும் கதாநாயகி  அருந்ததி நாயரிடம் கதாநாயகன் விதார்த்திற்கு காதல் மலர்கிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தில் அந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டி புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் கொண்டு காண்பித்தாள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கட்டியிருக்கும் கழிப்பறைக்கு ரூபாய்  பன்னிரண்டாயிரம் பணம் தருவதை கேள்விப்பட்டு எதிர் வீட்டில் வசிக்கும் ஹலோ கந்தசாமி கட்டிய கழிப்பறையை புகைப்படம் எடுத்து ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் கொடுத்து பன்னிரண்டாயிரம் ரூபாய் பணத்தை ‘பருத்திவீரன்’ சரவணன் பெற்றுக்கொள்கிறார்.

பருத்திவீரன்’ சரவணன் எதிர் வீட்டில் வசிக்கும் ஹலோ கந்தசாமி தனது வீட்டில் கட்டிய கழிப்பறையின் போட்டோ எடுத்துக்கொண்டு ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் செல்லும் போதுதான்  ‘பருத்திவீரன்’ சரவணன் ஏமாற்றி தனது வீட்டில் கட்டிய கழிப்பறையில் போட்டோவை எடுத்து பணம் பெற்றுக் கொண்டது தெரிய வருகிறது.

ஊர் பஞ்சாயத்து தலைவரின் உத்தரவின்படி ‘பருத்திவீரன்’ சரவணன் மற்றும் கதாநாயகன் விதார்த் தங்களது வீட்டில்  கழிப்பறை கட்டி புகைப்படம் எடுத்துக் கொடுத்தவுடன் அவருடைய பணத்தை வாங்கி ஹலோ கந்தசாமியிடம் கொடுப்பதாக ஊர் பஞ்சாயத்து தலைவர் வாக்குறுதி  கொடுக்கிறார்.

கதாநாயகன் விதார்த் மற்றும் ‘பருத்திவீரன் ‘சரவணனும் இணைந்து கழிப்பறை கட்டுவதற்காக வீட்டின் பின்புறம் குழி தோண்ட ஆரம்பிக்கிறார்கள்.

இருவருக்கும் கழிப்பறை  குழி தோண்டுவது மிகவும் சிரமமாக இருக்க, ஜார்ஜ் மரியானிடம் குழி தோண்டும் வேலையை ஒப்படைக்கின்றனர்.

ஜார்ஜ் மரியான் குழியை தோண்டும் போது சோழர் காலத்து பொற்காசுகள் பானை நிறைய கிடைக்கிறது.

அந்த புதையலை ஊருக்கு தெரியாமலும் அரசாங்கத்திற்கு ஒப்படைக்க வேண்டிய சோழர் காலத்து  புதையலை யாருக்கும் தெரியாமல் கதாநாயகன் வித்தார் மற்றும் பருத்திவீரன் சரவணன் ஜார்ஜ் மரியான் மூவரும் அந்த சோழர் காலத்து புதையலை பங்கு பிரித்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள்.

அதன் பிறகு புதையல் பற்றிய தகவலை ஊரில் உள்ளவர்கள் அனைவரும் தெரிந்து கொண்டு  ஊரில் உள்ள அனைவரும்  புதையலில் பங்கு கேட்க ஆரம்பிக்கிறார்கள்.

அதன் பின்பு பங்கு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போக இறுதியில் அந்த சோழர் காலத்து புதையலில் கிடைத்த  பொற்காசுகள் அனைவருக்கும் பங்கு கிடைத்ததா? பங்கு கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த ஆயிரம் பொற்காசுகள் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஆயிரம் பொற்காசுகள் திரைப்படத்தில் கதாநாயகனாக விதார்த் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் விதார்த் அந்த திரைப்படத்தில் வரும் கதாபாத்திரமாக மட்டுமே நடித்திருக்கிறார்.

எந்த ஒரு இடத்திலும் கதாநாயகன் என்ற நினைப்பு இல்லாமல் கதைக்கு ஏற்ற ஒரு நடிகராக இயல்பாக நடித்து பலம் சேர்த்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் விதார்த் நடிப்பின் மூலம் மிகப் பெரிய அளவில் ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்.

தான் ஒரு நல்ல நடிகன் என்பதை இந்த ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படத்தில் கதாநாயகன் விதார்த் நிரூபித்திருக்கிறார்.

கதாநாயகன் விதார்த்தின் தாய்மாமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பருத்திவீரன் சரவணன் மிகவும் அருமையாக இவருடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த ஆயிரம் பொற்காசுகள் திரைப்படத்தில் கதாநாயகியாக அருந்ததி நாயர் நடித்திருக்கிறார்.

கதாநாயகி அருந்ததி நாயர் மிகவும் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மயானத்தில் குழி தோண்டும் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் மரியன், அவருடன் பயணிக்கும் பவன்ராஜ், மீன் வியாபாரியாக நடித்திருக்கும் ஹெலோ கந்தசாமி, காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் பாரதி கண்ணன், ஊர் பஞ்சாயத்து தலைவராக  நடித்திருக்கும் கர்ணராஜா, பொற்கொல்லர் வேடத்தில் நடித்திருக்கும் வெற்றிவேல் ராஜா, பாம்பு பிடிப்பவராக நடித்திருக்கும் ஜிந்தா, மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருக்கும் ஜிந்தா கோபி, கதாநாயகியின் தாயாக நடித்திருக்கும் தமிழ் செல்வி நகை உருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுப்பிரமணி என இந்த ஆயிரம் பொற்காசுகள் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர் நடிகைகளும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் கைதட்டல் பெறும் அளவிற்கு நடித்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் சோகமான வேடங்களில் நடிக்கும் நடிகை செம்மலர் அன்னம், கூட இந்த திரைப்படத்தில் ஜாலியான கதாபாத்திரத்தில் நடித்து சிரிக்க வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பானு முருகன் ஒளிபதிவு மூலம் எளிமையான கிராமத்தை மிகவும் அழகாக காண்பித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜோஹன் சிவனேஷ்  இசையில் பாடல்களும், மற்றும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்து திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

படத்தொகுப்பாளர்கள் ராம் மற்றும் சதீஷ் எந்த இடத்திலும் சிறு தொய்வு ஏற்படாத வகையில் காட்சிகளை வேகமாக நகர்த்தி சென்றாலும், நகைச்சுவை காட்சிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் படத்தொகுப்பு மூலம் காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்.

புதையலை பங்கிட்டுக் கொள்வதை மையமாக வைத்து நகரும் கதை என்றாலும், அதை அழுத்தமான திரைக்கதையின் மூலம் முழுக்க முழுக்க நகைச்சுவையாக நகர்த்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ரவி முருகையா.

சோழர் காலத்து பொற்காசுகளை பங்கு போட்டுக்கொள்வது, என்ற  சிறு கதையை  வைத்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் நகைச்சுவை திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ரவி முருகையா  இயக்கியிருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘ஆயிரம் பொற்காசுகள்’ தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு கிடைத்த சிரிப்பு புதையல் என கூறலாம்.

பின்குறிப்பு :- இந்த ஆயிரம் பொற்காசுகள் திரைப்படத்தை பார்த்து வயிறு குலுங்க சிரித்து விட்டு வயிறு வலியால் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டால் ஆயிரம் பொற்காசுகள் திரைப்படத்தின் படக்குழுவினர் பொறுப்பல்ல.