கடந்த ஒரு வாரமாக ஜியோஹாட்ஸ்டார் தமிழின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது !
கடந்த ஒரு வாரமாக ஜியோஹாட்ஸ்டார் தமிழின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது !
சென்னை 20 பிப்ரவரி 2026 இன்ஸ்டாகிராம் பதிவுகள் வழக்கத்திற்கு மாறாக இருந்தன. எல்லா பதிவுகளிலும் குறும்பான நாயின் காலடி தடங்கள் பதிவாகி இருந்தன. இதற்கு காரணம் யார் என்று கேள்வி எழுந்தபோது குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கும் ஒரு வீடியோ வெளியானது.
ஆனால் இது சைபர் குற்றம் கிடையாது. இது ஒரு டேக் ஓவர். அந்த ’ஹேக்கர்’ யார் தெரியுமா? நான்கு கால்கள் கொண்ட சூப்பர் ஸ்டார் ’லக்கி’ தான் அது! வீடியோவில் தான் ஹேக் செய்ததை லக்கி ஒப்புக்கொண்டதில் இருந்து இந்த வாரத்தில் அதிகம் பேசப்பட்ட வீடியோவாக இது மாறியது. தொடர்ந்து வெளியான அனைத்து பதிவுகளிலும் லக்கியின் குறும்பான காலடி பதிவுகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்படுத்தியது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிரடியாக முடக்கியது குறித்தான வீடியோ, நாய்களுக்கு தடுப்பூசி குறித்து பொது அறிவிப்பு, லக்கியின் காலடி சுவடுடன் எஸ்.கே.-வுக்கு பிறந்தநாள் வாழ்த்து, ’ரெசார்ட்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர், அனைத்து வாராந்திர ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் புரமோக்களை லக்கி ஒப்புதல் கொடுத்து தனது காலடி சுவட்டையும் அதில் பதித்தது போன்றவை லக்கியின் டேக் ஓவரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம்பெற்றிருந்தவை ஆகும்.
உண்மையிலேயே இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டிருக்கிறதா அல்லது இது ஒரு மார்க்கெட்டிங் உத்தியா? அடுத்து லக்கி என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறது என பல்வேறு குழப்பங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த கேள்விகளுக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது.
வெளியாகவிருக்கும் குடும்ப பொழுதுபோக்கு கதையான ’லக்கி’ திரைப்படத்தின் புரமோஷனின் ஒரு பகுதிதான் இந்த டேக் ஓவர். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் தங்கள் குரல் மூலம் நடித்துள்ளனர் (voice performances).
லக்கி இதுகுறித்து கூறியதாவது, “நான் சிஸ்டத்தை ஹேக் செஞ்சுட்டேனா? நான் கீபோர்ட்ல நடந்து போனதுதான் இப்படி வைரல் ஆகிருச்சு. இன்ஸ்டாகிராமை நான் டேக் ஓவர் செய்தது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்குன்னு நீங்க நினைச்சா, படத்துல ஜி.வி. பிரகாஷை என்னென்ன பண்ணப்போறேன்னு பார்க்க காத்திருங்க!”
இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட கலகலப்பையும் குறும்பையும் போலவே, ’லக்கி’ திரைப்படத்திலும் நகைச்சுவை, குறும்பு, உணர்வுப்பூர்வமான காட்சிகள் என அனைத்து வயதினருக்கும் ஏற்ற முழுமையான பொழுதுபோக்கு படமாக இது இருக்கும் என உறுதியளிக்கிறது.
பிப்ரவரி 20 முதல் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ’லக்கி’ ஸ்ட்ரீம் ஆகும்.
இந்த விளையாட்டுத்தனமான டிஜிட்டல் ஹேக் மூலம், கதைசொல்லல் திரையில் மட்டுமல்ல, சில நேரங்களில் அது உங்கள் சமூகவலைதளங்களிலும் நடக்கலாம் என்பதை ஜியோஹாட்ஸ்டார் தமிழ் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ‘லக்கி’யை நாளை முதல் காண தயாராகுங்கள்!
Related posts:
ஜியோஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘போலீஸ் போலீஸ்’ எனும் தொடர் – முதல் லுக் போஸ்டரை வெளியிட்டது
மத்திய அரசுக்கு கட்டுப்படாத பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ட்விட்டர் இனையத் தளங்களுக்கு மே 26 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது?
ஒரு பக்கம் வருத்தம் இன்னொரு பக்கம் மகிழ்ச்சி ; இருவித ரியாக்சன் காட்டும் ஜீவி-2 நாயகி அஸ்வினி சந்திரசேகர்!
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் வெளியீடு!
இன்றைய பெண்களுக்கான செய்தியுடன் கூடிய இளமை ததும்பும் வீடியோ பாடலான ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’-க்காக இணைந்துள்ள யூடியூபர் நக்ஷா சரண் & சாண்டி.
நடிகர் விக்ராந்த் நடிப்பில் ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய தமிழ் தொடருக்கான அறிமுக புரோமோவை ஜியோஹாட்ஸ்டார் அதன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது!
இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
நடிகர் தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர்’ திரைப்படம் வெளிவருவதில் இரண்டு தடங்கல்கள் அதிர்ச்சியில் தளபதி ரசிகர்கள்.
மே 2022 மே 8 அன்று ஒளிபரப்பாகவுள்ள ‘அகண்டா’ திரைப் படத்துடன் ஜீ தமிழின் கோடை பொழுது போக்கு கொண்டாட்டம் துவங்கவுள்ளது.
ஆஹா தமிழுடன் கைகோர்க்கும் பூர்விகாவின் வாடிக்கையாளர்களுக்கு ‘ஆஹா’ தமிழின் அசத்தல் பரிசு!!

