மத்திய அரசுக்கு கட்டுப்படாத பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ட்விட்டர் இனையத் தளங்களுக்கு மே 26 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது?

சென்னை 25 மே 2021

மத்திய அரசுக்கு கட்டுப்படாத பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ட்விட்டர் இனையத் தளங்களுக்கு மே 26 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது?

கொரோனா வைரஸ் நோய் தொற்று காலத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லை என்றால் இந்த சமூகம் இயங்குமா? என்பது கேள்விக் குறியாகி உள்ளது.

அந்தளவிற்கு ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிராக பதிவுகள் பகிரப்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன.

மேலும் ஓடிடி தளங்களில் ரிலீசாகும் படங்கள் வரைமுறை இல்லாமல் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.

எதிர்ப்பு அதிகமானால் இதன்பின்னர் சம்பந்தப்பட்ட தளங்கள் அந்த பதிவை நீக்கும்.

இதனையடுத்து சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த கடந்த பிப்ரவரியில் ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு வெளியிட்டது.

அதாவது… “சமூக வலைத்தளங்களில் வரும் பதிவுகள் தொடர்பான புகார்களை விசாரிக்க தனி குழு வேண்டும்.

இதில் மத்திய அமைச்சர்கள் அதிகாரிகள் இடம் பெறுவார்கள்.

இவர்கள் சமூக வலைத்தளங்களில் வரும் தவறான பதிவுகளை கவனித்து அதன் மீது நடவடிக்கை எடுக்க சொல்வார்கள்.

உடனே சம்பந்தப்பட்ட வலைத்தளங்கள் அந்த பதிவை 2 வாரங்களில் நீக்க வேண்டும்.

ஓடிடி, அமேசான், டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட தளங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

இவ்வாறு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை மூலம் புதிய விதியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த அவகாசம் இன்றோடு முடிவடைகிறது.

மத்திய அரசின் புதிய கொள்கையை மற்ற தளங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்தியாவின் “கூ” செயலி மட்டுமே இதை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவும் விதித்தது மத்திய அரசு. காலக்கெடு இன்று மே 25 தேதியுடன் முடிவடைகிறது.

ஆனால் மத்திய அரசின் விதிகளை அமல்படுத்த ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் 6 மாதம் அவகாசம் கேட்டிருந்தன.

ஒருவேளை மத்திய அரசு கூடுதல் அவகாசம் கொடுக்கவில்லை என்றால் இந்தியாவில் நாளை முதல் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.

error: Content is protected !!