ஃபிலிம்பேர் விருதுகள்: இந்த முறை SRK vs SRK, சிறந்த நடிகர் பிரிவில் ஜவான் மற்றும் டங்கி திரைப்படங்களுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் நடிகர் ஷாருக்கான் !!
ஃபிலிம்பேர் விருதுகள்: இந்த முறை SRK vs SRK, சிறந்த நடிகர் பிரிவில் ஜவான் மற்றும் டங்கி திரைப்படங்களுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் நடிகர் ஷாருக்கான் !!
சென்னை 16 ஜனவரி 2024 69வது ஃபிலிம்பேர் விருது விழாவை, நடிகர் ஷாருக்கான் முழுமையாக ஆக்ரமித்து விட்டதாகத் தெரிகிறது. பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய மூன்று பிளாக்பஸ்டர்களுடன் இந்த ஆண்டு திரையுலகை முழுவதுமாக ஆட்சி செய்தார் கிங்கான் SRK. பதான் மற்றும் ஜவான் மூலம், SRK திரையுலகில் 2600 கோடிகள் அளவில் பாலிவுட்டின் வருவாயில் பங்களிப்பு செய்துள்ளார்!
இந்த ஆண்டு முழுவதும் வெற்றி அலைகளை உருவாக்கி வரும் நிலையில், அவரது பிளாக்பஸ்டர்களான பதான் மற்றும் ஜவான் திரைப்படங்கள் இப்போது, 69வது ஃபிலிம்பேர் விருதுகளில் சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜவான் மற்றும் டங்கி படத்திற்காக ஷாருக்கான் சிறந்த நடிகர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
SRK டங்கி படத்திற்காக சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) பிரிவிலும் சிறந்த துணை நடிகர் பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
பதான் திரைப்படம் சிறந்த இயக்குநர் பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் பிரிவில், ஜவான் திரைப்படத்திற்காக அட்லீ மற்றும் பதான் படத்திற்காக சித்தார்த் ஆனந்த் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது SRK எந்தெந்த பிரிவுகளில் விருதுகளை வெல்வார், குறிப்பாக எந்தப் படத்திற்காக வெல்வார் என்பது தான் இப்போதைய பேசுபொருள். இந்த விருது வழங்கும் விழாவில் ஷாருக்கானுக்கு போட்டி அவரே தான் என்பது குறிப்பிடதக்கது.
SRK இந்த ஆண்டில் 8 கோடி வரையிலான பார்வையாளர்களை தன் படங்கள் மூலம் திரையரங்குகளுக்கு அழைத்து வந்துள்ளார். ஜவான் 3.93 கோடி, பதான் 3.20 கோடி பங்களிப்புடன், ஆண்டு முழுவதும் அதிரடி காட்ட டன்கி 1 கோடிக்கு மேல் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
இதுவரை இம்மாதிரியான சாதனை செய்த முதல் இந்தி திரைப்பட நடிகர் ஷாருக் மட்டுமே. பதான், ஜவான், டங்கி ஆகிய மூன்று படங்களை ஒரே வருடத்தில் தந்து ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார் ஷாருக்கான்.
Related posts:
புதிய சாதனை 600 கோடி கிளப்பை துவக்கிய ஷாருக்கான்! ஜவான் மூலம் 25 நாட்களில் இந்த சாதனையை புரிந்த ஒரே நடிகர் ஷாருக்கான்!!
ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இடம் பெற்றிருக்கும் ‘ஜவான்’ படத்தின் புதிய போஸ்டரை ஷாருக்கான் வெளியிட்டார்!!
ஷாருக்கான் – ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான ‘டங்கி’ திரைப்படம், உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்து இருக்கிறது.!!
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ வெளியான முதல் நாளில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து உலக அளவில் சாதனை படைத்திருக்கிறது!
“ஷாட் பூட் த்ரீ” படத்தில் நடித்துள்ள பூவையார், பிரனிதி மற்றும் வேதாந்த் சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஜவான்’ பாடல்கள், ஜவான் குறித்து இணையத்தில் பகிர்ந்த நடிகர் ஷாருக்கான்.!!
நடிகர் ஷாருக்கான் #AskSRK இல் தனது அசத்தலான பதில்களுடன் மீண்டும் வந்துள்ளார்! எங்கெங்கும் ஜவான் திரைப்பட உற்சாகம் !!
மக்களின் இதயங்களை வென்ற டங்கி 400 கோடி வசூலைக் கடந்து சாதனை இந்தியாவில் மட்டும் 200 கோடியை கடக்கவுள்ளது !!
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் வெளியிட்ட ‘ஜவான்’ திரைப்பட அப்டேட்.!!
இந்தியாவில் 200 கோடி மற்றும் உலகளவில் 400 கோடி கிளப்பில் நுழைந்த ஷாருக்கின் இந்த வருடத்தின் 3வது திரைப்படம டங்கி!!

