“ஷாட் பூட் த்ரீ” படத்தில் நடித்துள்ள பூவையார், பிரனிதி மற்றும் வேதாந்த் சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

“ஷாட் பூட் த்ரீ” படத்தில் நடித்துள்ள பூவையார், பிரனிதி மற்றும் வேதாந்த் சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை 26 செப்டம்பர் 2023 இங்கிலாந்தில் நடைப்பெற உள்ள மூன்றாவது வேல்ஸ் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் “ஷாட் பூட் த்ரீ” படத்தில் நடித்ததற்காக பூவையார், பிரனிதி மற்றும் வேதாந்த் ஆகியோர் சிறந்த துணை நடிகருக்கான பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

பூவையார், பிரனிதி மற்றும் வேதாந்த் ஆகிய மூன்று பேரின் பங்களிப்பு இத்திரைப்படத்திற்கு பெருமை சேர்த்தது மட்டும் இல்லாமல் வேல்ஸ் குழந்தைகள் திரைப்பட விழாவின் நடுவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இவர்கள் மூன்று பேரும் வேல்ஸ் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகருக்கானப் பிரிவில் தேர்வாகியுள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் பெருமையாக உள்ளது. மூன்று பேரும் அவர்களது கதாப்பாத்திரத்தை நன்றாகப் புரிந்துக்கொண்டு சிறப்பாக நடித்துள்ளனர். மூவரும் இந்த பரிந்துரைக்கு முழுத் தகுதியானவர்கள் என்று “ஷாட் பூட் த்ரீ” திரைப்படத்தை எழுதி, இயக்கி மற்றும் தயாரித்துள்ள திரு. அருணாச்சலம் வைத்யநாதன் கூறியுள்ளார்.
“ஷாட் பூட் த்ரீ” திரைப்படம் செல்லப் பிராணிகளுக்கும், நமக்கும் இடையே இருக்கும் பிணைப்பைக் கொண்டாடுவதன் மூலம் சர்வதேச திரைப்பட விழாக்களின் பார்வையாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
அக்டோபர் 06 திரையரங்குகளில் “ஷாட் பூட் த்ரீ” திரைப்படம் வெளியாகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குடும்பமாகப் பாக்ககூடிய சிறந்த அனுபவத்தை தரும் பொழுதுபோக்குத் திரைப்படமாக வந்துள்ளது.
இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி மற்றும் தயாரித்துள்ளார் அருணாச்சலம் வைத்யநாதன். ஆனந்த் ராகவ் மற்றும் அருணாச்சலம் வைத்யநாதன் இணைந்துத் திரைக்கதை எழுதியுள்ளனர். சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, சிவாங்கி, பூவையார், பிரனிதி, கைலாஷ் ஹீத் மற்றும் வேதாந்த் வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிபதிவு செய்துள்ளார். வீணை செல்வன் ராஜேஷ் வைத்திய இசையமைத்துள்ளார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்துள்ளார். முகில் சந்திரன் இணைத்தயாரிப்பு செய்துள்ளார். வெங்கடேஷ் சடகோபன் நிர்வாகத்தயாரிப்பு செய்துள்ளார். அருண்ராம் கலைச்செல்வன் துணைத்தயாரிப்பு செய்துள்ளார்.